பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் என்று பரிவுடன் உரைப்பவர் போல் பேசினார் பிள்ளை, "பானை கண்ணிலே பட்டா சொல்லி அனுப்புதேன்" என்றும் தெரிவித்தார். தனது தமாஷை தானே ரசித்துக் கொண்டு சிரித்தார் அவர். அந்த வீடு கட்டி முடிப்பதற்குள், நாலைந்து தடவைகள் அந்த அம்மாளை இப்படி இழுத்தடித்துப் பரிகாசம் பண்ணி மகிழ்ந்தவர் பிள்ளை. மகிழ்வண்ணபுரத்தில் மட்டுமல்லாது, அக்கம்பக்கத்து ஊர்களிலே, தனிரகமாகவும் பெரிதாகவும் எடுப்பாகவும் அமைந்திருந்த 'ஒத்தை வீடு' பிறவிப்பெருமாள் பிள்ளை காலத்தில் சந்தோஷம் நிறைந்ததாகவும், சக்தி வாய்ந்ததாகவும், மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரியதாகவும் திகழ்ந்தது. ‘எல்லாம் லட்சுமி நாராயணர் கிடைத்த அதிர்ஷ்டம்' என்று பிள்ளை நம்பினார். மற்றவர்களும் அதை அங்கீகரித்தார்கள். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று அந்தச் செம்பில் காணப்பட்ட திருஉருவத்துக்கு விசேஷ பூஜை செய்தார்கள். அன்று பலபேரை அழைத்து வடையும் பாயசமும் அளித்து மகிழ்ந்தார்கள். வீட்டுப் பெண்கள் இத்தகைய விசேஷங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். வீடு எப்போதும் ஒளிமயமாய், கலகலப்பாக விளங்கியது. அந்த வீட்டில் ஒரு கல்யாணம் வந்தது. முதல் கல்யாணம். பிறவிப்பெருமாள் பிள்ளையின் மகள் சூடிக்கொடுத்த நாச்சியாருக்குத் திருமணம். பிள்ளை அவர்களின் அன்புத் திருமகளுக்குக் க்ல்யாணம் என்றால் ஆடம்பரத்துக்கும் ஆரவாரத்துக்கும், கூச்சலுக்கும் கும்மாளிக்கும் கேட்கவா வேண்டும்! ஊரே அந்த வீட்டில்தான் குழுமியிருந்தது பல நாட்கள். கல்யாணம் முடிந்து, சூடி கணவன் வீடு போய்ச்சேர்ந்தாள். பிறகு, 'மறுவிடு விசேஷம்' மற்றுமொரு கல்யாணம்போல் நடை பெற்றது. - அதற்குப் பிறகு சூடி மாதத்துக்கு ஒரு தடவை' 'அம்மாவைப் பார்க்க' வந்தாள்; மாசத்தில் பாதிநாட்கள் அம்மா வீட்டிலேயே தங்கினாள். - இதனால் மாப்பிள்ளை வீட்டில் குறைகூறல்களும்