பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் வெளியே கதவு மறுபடியும் தட்டப்பட்டது. பலமாகத் தட்டப்பட்டது. "அம்மா... அம்மா... என்னை தெரியலையா? நான்தான் s தினமாக ஒலித்தது வெளியேயிருந்து குரல். 'முருகா, முருகா என்றாள் வீட்டுக்குள்ளிருந்த அம்மாள். பேய் எப்படி வேண்டுமானாலும் வரும். நினைத்த உரு எடுக்கும்; மயக்கும்படி பேசும். அவளுக்குத் தெரியாதா என்ன? மேலவீட்டு அக்காளும், சண்பகராமநல்லூர் அத்தையும் கதைகதையாகச் சொல்லவில்லையா? சூடியாம் சூடி அவள் எங்கே போயொழிந்தாளோ? நேரம் ஓடியது. சூடியின் நினைப்பு அம்மாளின் மனசை கனக்கச் செய்தது. கண்களில் நீர் பெருகியது. பாவிமகளுக்கு புத்தியும் போச்சே அப்படி. எல்லோர் மூஞ்சியிலும் கரியைப் பூசிட்டுப் போனாளே." - அவளே வந்தாலும் வந்திருப்பாளோ என்ற சந்தேகமும் மொட்டு விட்டது. - "அம்மா, கதவை திறவேன். நீ இப்போ திறக்கலேன்னா, தான் இந்த இடத்திலேயே உயிரை விட்டிருவேன். விடிஞ்சு கதவை திறக்கையிலே நீ என் பிணத்தைத்தான் பார்ப்பே" என்று வெளியே நின்றவள் அறிவித்தாள். சூடியாகத்தான் இருக்கும் என்றது அம்மாளின் உள்ளம். துணிந்து கதவை திறந்தாள். வந்தவள் வேகமாக உள்ளே புகுந்தாள். "அம்மா, என்னமா, விறைக்கு.குது குதுன்னு வருதே." என்று புலம்பினாள். 色母 தான் மழையில் நன்றாக நனைந்து போயிருந்தாள். அவள் தேகம் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பல்லோடு பல் அடித்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. ஒரு மூலையில் விழுந்து முடக்கிக் கொண்டாள். தாயின் மனம் இப்போது தவித்தது. ஒரு அறைக்குள் போய், பெட்டியைத் திறந்து நல்ல சேலை எடுத்து வந்தாள். மகளை தூக்கிப் பிடித்து, ஈரச் சேலையை களைந்து விட்டு, நல்ல சேலையை கட்டினாள். "பாவிமட்டை, எங்கே இருந்துட்டி இப்படி வாறே? உடம்பு அனலாக் கொதிக்குதே.காய்ச்சல் போட்டுப்