பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் சூடி திடீரென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்தாள். தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாடல்கள் கணிரென்று ஒலித்தன. இதை எல்லாம் இவள் எப்போ கற்றுக்கொண்டாள் என்று அவளுடைய அம்மாவே அதிசயிக்கும் விதத்தில் சூடி பாடிக் கொண்டே இருந்தாள். மணிக்கணக்கில் பாடினாள். பாட்டு நின்றதும் தம்பி.தம்பி" என்று கத்தினாள். புன்னைவனம் என்ன அக்கா? என்றபடி அருகில் வந்து நின்றான். "அவன் எங்கே-வெயிலு? அவனையும் கூப்பிடு. திருநீறு கொண்டுவா!" என்று பணித்தாள். திருநீற்று மரவையோடு இரண்டு பேரும் வந்தார்கள். "இப்படி பக்கத்திலே உட்காருங்க. திருநீறை அள்ளி என் மேலே எல்லாம் பூகங்க" என்று அவள் உத்திரவிட்டாள். அவர்கள் பூசினார்கள். . "உடம்பு பூரா எரியுது. இன்னும் நிறைய அள்ளிப் பூகங்க! என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள் அவள். இந்தக் கூத்தும் அடிக்கடி நிகழ்ந்தது. விட்டில் தயாரித்து வைத்திருந்த திருநீறு முழுவதும் தீர்ந்தது. அவள் நோய்தான் தீரவில்லை. சூடிக்கு ஞானக்கிறுக்கு என்று சிலர் சொன்னார்கள். காமக் கிறுக்கு என்று மற்றும் சிலர் பேசினார்கள். - "செய்வினை வச்சிருப்பாங்க. இவளோட மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேலைதான்" என்று ஒரு பெரியவள் ரொம்பத் தெரிந்தவள் மாதிரி உறுதியாகக் கூறினாள். 'இருக்கும் இருக்கும் என்று தலையாட்டினாள் தையல்நாயகி. சில குறிகாரர்கள் அவள் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்தினார்கள். 'செய் வினை வைப் பதிலும் எடுப்பதிலும் அந்த வட்டாரத்திலேயே கொம்பன் எனப் பெயர் பெற்றிருந்த செல்லம்பண்டிதர் வந்து சேர்ந்தார். - ஒரு வெள்ளிக்கிழமை அந்தி நேரத்தில் குத்துவிளக்கு முன்னே அமர்ந்து திருநீறு போட்டுப் பார்த்தார். "செய்வினைதான்.