பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் கொண்டே "வாங்க வாங்க எல்லாரும் வாங்க. திடீர்னு வந்ததுனாலே யாரோ என்னவோன்னு நின்னுட்டேன்" என்றாள். லேசாகச் சிரித்தாள். எல்லோரும் வீட்டுக்குள் வந்தார்கள். ஒரே பூ வாசமா இருக்குதே" "சாம்பிராணி மணக்குதே?" "பூ வாசனை இருக்கு. பூக்களை காணோம்?" என்று ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொல்லி, அங்குமிங்கும் பார்த்தார்கள். குத்துவிளக்கு, கை விளக்குகள், இரண்டு அரிக்கன் லாந்தர்கள் எரிந்து போதுமான வெளிச்சம் நிலவியது. "ஏது ஒரே வெளிச்சமும் வாசமுமா இருக்கு? என்ன பண்ணிக்கிட்டிருந்தே அக்கா?" என்று விசாரித்தார் விருந்தாளியாக வந்த தம்பி. தையல்நாயகி பதில் சொல்வதற்குள், சூடி கலகலவென்று சிரித்தாள். சிரித்துக் கொண்டேயிருந்தாள். தொடர்ந்து, அழுதாள். எல்லோருக்கும் "ஐயோ பாவம்' என்றிருந்தது. "நாங்க சாத்தா கோயிலுக்கு பூசை போட வந்ததோம். நேரமாயிட்டுது. இருட்டு நேரத்திலே ஊருக்குப் போவானேன், அக்கா வீடுதான் இருக்கே, ராத்தங்கிட்டு, பலபலன்னு விடியயிலே எழுந்திருச்சுப் போகலாம்னு எண்ணி, வண்டியை இங்கே திருப்பினோம். சூடிக்கு உடம்பு நல்லாயில்லேன்னும் கேள்விப்பட்டிருந்தோமா; அவளையும் பார்த்தாப்பலே ஆச்சுன்னும் நினைச்சோம். அதுதான் திடீர்னு வந்து நிக்கிறோம்" என்று விவரித்தார் நல்லகண்ணுப்பிள்ளை. தையல்நாயகி அம்மாளுக்கு உறவினர்தான் அவர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வமான சாத்தா அந்தக் குடும்பம் வசிக்கிற ஊரிலேயே இருப்பதில்லை. வேறு எங்காவது ஒரு இடத்தில்-பல மைல்கள் தூரத்துக்கு அப்பால்-கோயில் கொண்டிருக்கும். அது ஏன் அப்படி என்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் தெரியாது. எவராவது காரணம் கேட்டாலும், "நம்ம முன்னோர்கள் கும்பிட்டு வந்த தெய்வம். அவங்க அந்தக் காலத்திலே அந்த இடத்திலே இருந்திருப்பாங்க" என்று சொல்லி வைப்பார்கள். அதே ரீதியில்தான். நல்லகண்ணுப்பிள்ளை குடும்பத்துக்கு