பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் நி ான்கு புன்னைவனநாதன் செத்தது 'அநியாயச் சாவு என்று ஊர் பூராவும் வருத்தப்பட்டது. - சூடியின் கணவனை கைகால் விளங்க விடாமல் பண்ணுவதற்காக செய்வினை வைக்க திட்டமிட்டதற்குத் தனக்கு கிடைத்த தண்டனை இது என்று தையல்நாயகியின் மனசுக்குப் பட்டது. அப்படி செய்வினை வைக்க முயன்ற போது தடை ஏற்பட்டுவிட்டதால் ஆத்திரமடைந்த ஏவல் பேய் புன்னைவனத் தைப் பலி கொண்டு விட்டது என்றும் அவள் நினைத்தாள். அவளுக்கு மனசே சரியில்லாமல் போய் விட்டது. கொஞ்ச நாளைக்காவது இந்த இடத்தை விட்டு வேறு இடங்களுக்குப் போய்வர வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். தம்பி இறந்த பிறகு சூடியின் உடல் நிலையில் சிறிது குணம் கண்டிருப்பது போல் தோன்றியது. அவள் பித்துப் பிடித்தது போல், வெறும் வெளியை வெறித்துப் பார்த்தபடி நெடுநேரம் உட்கார்ந்திருந்தாளே தவிர, முன்ன மாதிரி சிரிக்கவும் இல்லை; அழவுமில்லை. நாலு இடங்களுக்குப் போய் வருவது சூடிக்கும் நலம் பயக்கும் என்று அம்மாள் எண்ணினாள். திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருக்குற்றாலம், பழனி, மதுரை, ராமேஸ்வரம் என்று போய் வந்தால் புண்ணியத்துக்குப் புண்ணியமும் சேரும்; மனசுக்கு நலமும் உடலுக்கு பலமும் கிட்டும் என்று அவள் கருதினாள். இந்த எண்ணத்தை மகளிடம் கூறியபோது அவளும் இணங்கினாள். பன்னிரண்டு வயது வெயிலுகந்தநாதனைத் தங்களோடு அழைத்துப் போக வேண்டாம் என்றே அம்மாள் விரும்பினாள். அவனிடம் தங்கள் திட்டத்தைப் பற்றி அறிவித்தபோது, போயிட்டு வாங்க. நான் எங்கேயும் வரலே" என்று அவன் சொல்லி விட்டான். நல்லதாப் போச்சு என்றே அம்மாள் சந்தோஷப்பட்டாள். நல்ல நாள் பார்த்து அம்மாவும் மகளும் கிளம்பினார்கள். வெயிலுப் பையனை அவனுடைய சிற்றப்பா பொறுப்பில் விட்டு வைத்து, வீட்டுச் சாவியையும் அவரிடமே ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள்.