பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருவரும் திரும்பி வந்தார்கள். சூடி ஆரோக்கியமாய் காணப்பட்டாள். ஒத்தை வீடு மறுபடியும் கலகலப்பாக விளங்கியது. ஊர்வழி போய் வந்தவர்களை விசாரித்து, சேம லாபங்கள் பரிமாறிக் கொள்வதற்காகப் பலரும் வந்து போனார்கள். மகிழ்வண்ணபுரம் பெரிய கோயிலில் கோடைகாலச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மதுரையிலிருந்து ஒரு சாமியார் வந்தார். பதினைந்து நாட்கள் சைவசமயக் கதை எதையாவது எடுத்துச் சொல்வது வழக்கம். அப்படி வருகிறவருக்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டில் சாப்பாடு என்று ஒரு திட்டம். அதன்படி ஒரு நாள் அந்தச் சாமி யார் ஒத்தை வீட்டுக்கும் வந்தார். அங்கு அவருக்கு விருந்து உபசாரங்கள் பலமாக நடைபெற்றன. அவருக்கு ரொம்ப திருப்தி, சூடி விழுந்து விழுந்து உபசரித்ததும், சிரித்துச் சிரித்துப் பேசியதும் அதைவிட அதிக மகிழ்ச்சி தந்தன. அன்று முதல், அந்த ஊரில் இருந்தவரை, தினசரி அவர் பெரிய வீட்டுக்கு வந்து பேசிப் பொழுது போக்குவதை வழக்கமாகக் கொண்டார். அது சூடிக்கு மிகுந்த சந்தோஷம் அளித்தது. இது போன்ற விஷயங்களில் அக்கறையும் அளவுக்கு அதிகமான கவனிப்பும் செலுத்தும் இயல்புபெற்ற சில பிரகிருதிகள் "சாமியான் வலைவீசுதான் போலிருக்கு. மீனும் வசமாச் சிக்கிக்கிடுமின்னுதான் தோணுது" என்று பேசிக் கொண்டார்கள். "ஏய் வெயிலு! சாமியான் அலையிற அலைச்சல் சரியில்லே. அவன் சரியான அர்ச்சுன சந்நியாசி. வீட்டிலே அதிகம் அண்ட விடாதே. சாக்கிரதையா இருந்துக்கோ" என்று எச்சரித்தும் வைத்தார்கள். அம்முறை சாமியார் ஒழுங்காய் போய் சேர்ந்தார். ஆனால் ஒரு மாசத்தில் திரும்பவும் வந்தார். பக்கத்து நகரத்தில் சொற்பொழிவுக்கு ஏற்பாடாகியிருக்கிறது என்றும், வந்ததோ வந்தோம், இங்கு வந்து இவர்களையும் பார்த்துவிட்டுப் போகலாமே என்று தோன்றியதால் மகிழ்வண்ணபுரத்துக்கும் வந்ததாகவும் அவர் சொன்னார். சூடிக்கு மகிழ்ச்சிதான். மகள் சந்தோஷமாக இருந்தால் சரிதான் என்று தாயும் மகிழ்ச்சி