பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் "ஏய் கொட்டைகட்டி பெரிய வீட்டுச் சூடிக்கும் உமக்கும் என்ன உறவு? எதுக்கு அவளைத் தேடி ஓடி வாறேரு?" என்று கேட்டபடி, அவர் கழுத்திலே கிடந்த பருமனான உத்திராட்ச மாலையைப் பிடித்து இழுத்தான் ஒருவன். அவன் இழுத்த இழுப்பில் அது அறுந்துவிட்டது. "ஓம் முருகா!" என்றார் சாமியார். நீங்க ஏதோ தப்பிதமாக எண்ணிக் கொண்டு, இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். ஆண்டவன் உங்களை கேட்பார்" என்று பிரசங்க பாணியில் பேசினார். "இவரு எப்பவும் சரியாகவே எண்ணி, சரியாகவே பேசி, சரியாகவே செயல்புரியும் சரிச்சாமி! தெரியும் வே" என்று கூறி, மற்றொருவன் அவர் தலையில் ஒரு தட்டு தட்டினான். “ஏ பாவிகளா!" என்று கத்தினார் சாமியார். "வீண் பேச்சு எதுக்கு? சாமியாரே, ரொம்ப காலமா நாங்க உம்மை கவனிச்சு வாறோம். உம்ம நடத்தை சரியில்லே, வேறு எந்த ஊரிலே நீரு என்ன நாடகம் நடத்தினாலும் எங்களுக்குக் கவலையில்லை. உம்ம அர்ச்சுண பாணி பவளக்கொடி லீலைகளை இந்த ஊரிலே வச்சுகிட வேண்டாம். அதிலும் பெரிய வீட்டிலே அதைக் காட்ட வேண்டாம். ஆமா, சொல்லிப் போட்டேன்" என்று எச்சரித்தான். “வந்த மச்சர்ன் திரும்பிப் போனான் இளிச்ச வாயோடேன்னு ஒழுங்காப் போய்ச் சேரும். இதுதான் வழி!" என்று அவரைத் திருப்பி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகும் திசையைக் காட்டினான் ஒருவன். "போயிட்டு வாரும். இந்த அடியை எப்பவும் ஞாபகம் வச்சுக்கிடும்" என்று பிடறியில் பலமாக ஒரு அறை கொடுத்தான் மற்றொருவன். முன்னால் போய் விழுவதுபோல் தடுமாறி, தாக்குப் பிடித்து, விழாமல் தப்பிக்கொண்டார் சாமியார். "காலிப் பயலுக... உருப்படமாட்டானுக!" என்று முனகியவாறே நடந்தார். "ஏய் காவி வேட்டிப் பயலே ஒழுங்கா ஊர் போய்ச் சேரனும்னு சொன்னா, மூச்சுக் காட்டாமப் போ. வீணா வாயை மேயவிடாதே. அப்புறம் இந்தப் புறமடையிலே பூத்து வச்சிருவோம்