பக்கம்:ஒரே உரிமை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
யாருக்குப் பிரதிநிதி?



"அம்மா!"

"யார், அது?"

"ஐயா இருக்கிறாரா, அம்மா?"

"இருக்கிறார்: என்ன சமாச்சாரம்?"

"ஒண்ணுமில்லை, அம்மா! அவரைக் கொஞ்சம் பார்க்கணும்."

"ரொம்பப் பார்க்க வேண்டியதில்லையோ! ஒண்ணுமில்லாததற்கு அவரைப் பார்ப்பானேன்?"

"இல்லை அம்மா! வந்து ....."

"என்னத்தை வந்து......? ஐயாவைப் பார்ப்பதற்கு வேளை நாழி ஒன்றுமே கிடையாதா? நினைத்த நேரத்திலெல்லாம் பார்க்க வந்து விட வேண்டியது தானா? இந்தக் கொட்டும் மழையிலே எப்படித்தான் நீங்கள் வந்து இப்படிக் கழுத்தை அறுக்கிறீர்களோ தெரியவில்லையே!"

இந்தச் சமயத்தில் புதிதாகச் சிநேகமான ஒரு பெரிய மனிதருடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த 'ஐயா', "என்னடி அது? இப்படி உள்ளே வா!" என்று தம்முடைய தர்மபத்தினியை அழைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/104&oldid=1149377" இலிருந்து மீள்விக்கப்பட்டது