பக்கம்:ஒரே உரிமை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாருக்குப் பிரதிநிதி?

107


இந்த 'அரசியல் சித்தாந்தம்' ஸ்ரீ அன்னவிசாரத்தை என்னவோ செய்தது. புத்தகத்தை மூடி வீசி எறிந்துவிட்டு எழுந்தார். எதிரே சகதர்மிணி காப்பியுடன் வந்து நின்றாள். அதை அலட்சியமாக வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு, அவசர அவசரமாகச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார். இன்று சட்ட சபையில் அந்த 'அசல் தரித்திரங்'களைப் பற்றி எப்படியாவது வெளுத்து வாங்கி விடுவது என்றும், ரூஸ்ஸோவின் கூற்றைப் பொய்யாக்கி, மூன்றாவது மனப்பான்மையான மக்கள் மனப்பான்மையை இனி முதல் மனப்பான்மையாகக் கொள்வதென்றும் தீர்மானித்துக் கொண்டு கிளம்பினார்.

என்றுமில்லாத விதமாக அன்று ஸ்ரீ அன்ன விசாரத்தைக் கண்டதும் மற்ற எம். எல். ஏ. க்கள் எல்லோரும் முகமலர்ச்சியுடன் வரவேற்றனர். ஸ்ரீ அன்னவிசாரம் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்து விழித்தது விழித்த படிநின்றார்.

"அன்னவிசாரத்துக்கு என்ன அப்பா! அடிக்கிறது யோகம்!" என்றார் ஒருவர்.

"இனிமேல் நம்மையெல்லாம் அவர் எங்கே கவனிக்கப் போகிறார்!" என்றார் இன்னொருவர்.

"எப்பொழுதாவது ஒரு சமயம் பேட்டியாவது அளிப்பாரோ, என்னமோ!" என்றார் மற்றும் ஒருவர்.

ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. "என்ன விசேஷம்?" என்று மெள்ளக் கேட்டார்.

"விசேஷமா! உங்களுக்குத் தெரியவே தெரியாதா, நீரும் ஒரு மந்திரியாகப் போகிறீர் ஐயா, மந்திரியாகப் போகிறீர்!" என்றார் ஒருவர்.

தூக்கி வாரிப் போட்டது ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு! இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "இதென்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/109&oldid=1149382" இலிருந்து மீள்விக்கப்பட்டது