பக்கம்:ஒரே உரிமை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

யாருக்குப் பிரதிநிதி?

பிதற்றல்? எந்த இலாக்காவும் காலியாக இருப்பதாகக் கூடத் தெரியவில்லையே! என்றார் அவர்.

"இலாக்கா காலியாக இல்லாவிட்டால் என்ன? நீர் 'இலாக்கா இல்லாத மந்திரி'யாக இருந்து விட்டுப் போகிறீர்!" என்றார் ஒரு வயிற்றெரிச்சல்காரர்.

இப்பொழுதுதான் இந்த விஷயத்தில் ஏதோ உண்மை இருக்க வேண்டுமென்று தோன்றிற்று ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு. உடனே அவருடைய கவனம் 'அசல் தரித்திரங்'களின் மீது சென்றது.

'இந்தச் சமயத்தில் அந்த 'அசல் தரித்திரங்களைப் பற்றி நாம் இங்கே ஏதாவது உளறுவானேன்? சமுத்திரக்கரை அழகாக இருக்கவேண்டு மென்பது நகரத்துப் பெரிய மனிதர்கள், பிரமுகர்கள் ஆகியவர்களின் அபிப்பிராயம். அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கிக் காரியம் செய்வது அரசாங்கத்துக்கு நல்லதா, அந்தத் தரித்திரங்களுடைய விருப்பத்துக்கு இணங்கிக் காரியம் செய்வது நல்லதா?— சீ, வேண்டாம்: வேண்டவே வேண்டாம். என்ன இருந்தாலும் நம்முடைய புத்தி இப்படிக் கீழே போகவேண்டாம். நாளுக்கு நாள் முன்னேற வேண்டிய நாம், அப்படி ஏதாவது இப்போது கேட்டு வைத்தால் அது சிலருக்கு பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காது. அதன் பயனாக ஒரு வேளை மந்திரிப் பதவி கிடைக்காமலே போனாலும் போய்விடலாம். நமக்கு எதற்கு வீண் வம்பு? 'எடுத்ததற்கெல்லாம் கையைத் தூக்கினோம், வீட்டுக்குப் போனோம்' என்று இருப்பதே மேல்!'

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் ஸ்ரீ அன்ன விசாரம் 'அசல் தரித்திரங்க'ளைப் பற்றிய விசாரத்தை விட்டார். சட்ட சபையில் 'சிவனே!' என்று உட்கார்ந்து கொண்டிருந்து விட்டு, வீடு திரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/110&oldid=1149383" இலிருந்து மீள்விக்கப்பட்டது