பக்கம்:ஒரே உரிமை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலைக்காரி விசாலம்

137

அப்புறம் எப்படிக் காலத் தள்ளுவது? இந்தச் சண்டாளன் வேலைக்கு எமனாயிருப்பான் போலிருக்கிறதே!

இப்படி அவள் எண்ணிக் கொண்டிருந்ததைக் குழந்தைகள் கவனித்ததாகத் தெரியவில்லை. அனந்த கிருஷ்ணன் 'ஊம்' என்றதுதான் தாமதம்; சேகரன் 'ஜம்' என்று வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

விசாலம் பொறுமையை இழந்து விட்டாள். அவள் ஆத்திரத்துடன் சேகரனைத் தூக்கிக் கீழே விட்டுவிட்டு, "அனந்த், ஏறிக்கொள்!" என்றாள்.

"ஊஹூம்...மாட்டேன்! கொஞ்ச தூரம் நான் நடக்கத் தான் போகிறேன்!" என்று பிடிவாதம் பிடித்தான் அனந்தகிருஷ்ணன்.

சேகரன் அழ ஆரம்பித்து விட்டான்.

தாயாருக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் தவித்தாள்.

அனந்தகிருஷ்ணன் அவளைக் கவனிக்கவில்லை. சேகரனை மீண்டும் வண்டியில் ஏற்றிவிட்டு, தானே வண்டியைத் தள்ள ஆரம்பித்தான்.

'பாம்ப பாம், பாம்ப பாம்!' என்று பங்களாவுக்கு வரும் பாதையிலிருந்து மோட்டார் 'ஹார்ன்' சத்தம் கேட்டது—ஆமாம்; விசாலம் எதிர்பார்த்தபடி எஜமான் தான் அந்தக் காரில் வந்து கொண்டிருந்தார்.

கதிகலங்கிப் போய் விட்டாள் விசாலம்.

கடைசியில் என்ன?—எஜமான் அந்த அநீதியை— அக்கிரமத்தைப் பார்த்தே விட்டார்! —சேகரன் வண்டியில் ஏறிக் கொண்டிருப்பதையும், தம்முடைய குழந்தை வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்வதையும்தான்!

ஒ.—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/139&oldid=1149445" இலிருந்து மீள்விக்கப்பட்டது