பக்கம்:ஒரே உரிமை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளி பேசுகிறது!

151


 ரொம்ப அழகுதான்!

"கூண்டின் கதவைத் திறந்துதான் பாரேன்; அது நன்றி கெட்டதனமாக நடந்துகொள்கிறதா, இல்லையா என்று!" என்றாள் தங்கை.

அக்காவுக்கு ரோசம், பொத்துக் கொண்டு வந்து விட்டது. "திறந்தால் என்னடி? ஓடிப்போய்விடுமா?" என்று தங்கையிடம் வீம்பு பேசிக் கொண்டே, நான் அத்தனை நாளும் அடைபட்டிருந்த சிறையின் கதவை அவள் அன்று திறந்தே விட்டாள்!

அவ்வளவுதான்; அதற்குப் பிறகு ஒரு நிமிஷமாவது அங்கே தாமதிக்க எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? "விடுதலை, விடுதலை, விடுதலை!" என்று கூவிக்கொண்டே எடுத்தேன் ஓட்டம்!

ஆஹா! எத்தனையோ நாட்களுக்குப் பிறகு—எவ்வளவோ கஷ்டங்களுக்குப் பிறகு—நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகக் கிடைத்த விடுதலையில்தான் என்ன இன்பம்! என்ன இன்பம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/153&oldid=1149461" இலிருந்து மீள்விக்கப்பட்டது