பக்கம்:ஒரே உரிமை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

குழந்தையின் குதூகலம்

“அப்படின்னா சொல்றேன் கேளு; சினிமான்னா, எல்லாம் ஒரே படமாயிருக்கும். ராஜா படம், ராணி படம், திருடன் படம் எல்லாம் வரும். அந்தப் படமெல்லாம் சும்மா அப்படியே இருக்கும்னு நினைக்கிறாயா? இல்லே; ஆடும், பாடும், பேசும், சிரிக்கும்–எல்லாம் செய்யும்!”

“அப்படியா சங்கர்! இன்னொரு சமயம் நீ போறப்போ என்னையும் கூட்டிக்கிட்டுப் போறயா?”

“உம்......சும்மாவா? காசு எடுத்துண்டு வரணும்; இல்லாட்டா உள்ளே விடமாட்டான்.”

“சரி, அது போகட்டும் சங்கர்! இந்தக் குதிரை உனக்கு ஏது?......அதைச் சொல்லு!”

“ஆமாம், ஆமாம்! அதுக்குள்ளே மறந்துட்டேனே! – நாங்க எல்லோரும் சினிமாவுக்குப் போனோமா, அப்புறம் நேரே ஹோட்டலுக்கு வந்தோம்......!”

“அது என்னடா, ஹோட்டல்......?”

சங்கருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இடிஇடியென்று சிரித்துவிட்டான். மணியை வெட்கம் பிடுங்கித் தின்றது. அந்த இடத்தைவிட்டு உடனே ஓடிவிடலாமா என்றுகூட நினைத்தான். ஆனால் ஹோட்டலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை, அந்த உணர்ச்சியை மீறி நின்றது.

“ஏண்டா, மணி! நீ நிஜமாச் சொல்லுடா! என்னாலே நம்பவே முடியலையே, உனக்கு ஹோட்டலைக் கூடவா தெரியாது?”

“நான் பொய் சொல்வேனா? எனக்கு நிஜமாவே தெரியாதுடா!”

“ஹோட்டல்னா ஒரே பட்சண மயமாயிருக்கும். பாதாம் ஹல்வா, குலோப்ஜான், குஞ்சாலாடு, ரஸ்குல்லா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/50&oldid=1148961" இலிருந்து மீள்விக்கப்பட்டது