பக்கம்:ஒரே உரிமை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தையின் குதூகலம்

57

“ஆமாண்டா, ஆமாம்!” என்றாள் அவள்.

“அப்படின்னா, இனிமே நான் அப்பாவோடே சினிமாவுக்குப் போவேன், ஹோட்டலுக்குப் போவேன், ‘பீச்’சுக்குக் கூடப் போவேன்!” என்று பொங்கி வந்த சந்தோஷத்தில் அடுக்கிக் கொண்டே போனான் மணி.

மாணிக்கம் பிள்ளை அவனுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. “அந்தப் பாவிதான் எனக்கு வயசாயிடுச்சுன்னு என்னை வேலையிலிருந்து தள்ளிட்டானே!” என்றார் இரண்டு சொட்டுக் கண்ணீரை உதிர்த்துக் கொண்டே.

“என்ன!” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் அவருடைய மனைவி.

“ஆமாண்டி, ஆமாம்!” என்றார் அவர் அலுப்புடன்.

“தயா விசயமா, கொஞ்ச நஞ்சம் பணம் கூடக் கொடுக்கலையா?” என்று கேட்டாள் அவள்.

“அதுகூடக் கேட்டுப் பார்த்தேனே! ‘இத்தனை வருசமா உனக்கு நான் வேலை கொடுத்து ஆதரிச்சதற்கு நீதாண்டா எனக்கு ஏதாச்சும் கொடுத்துட்டுப் போவணும்’ என்கிறானே!” என்றார் அவர்.

குழந்தை மணிக்கு அப்பாவைப் பார்த்த பிறகு அங்கே நிற்கவே மனமில்லை. ‘குதி, குதி’ என்று குதித்துக் கொண்டே அவன் வாசலுக்கு ஓடி வந்தான். அவனுக்கு எதிரே அவன் எதிர்பார்த்தபடி சங்கரும் வந்து கொண்டிருந்தான். “டேய் சங்கர்! என் அப்பா வந்துட்டாருடா! இனிமே நான் உன்னைப் போலவே சினிமாவுக்கு, ஹோட்டலுக்கு, ‘பீச்’சுக்கு – எல்லாம் போவேன், தெரியுமா!” என்று அவன் சங்கரிடம் பெருமையடித்துக் கொண்டான்.

ஒ.-4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/59&oldid=1148971" இலிருந்து மீள்விக்கப்பட்டது