பக்கம்:ஒரே உரிமை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மனக் குறை

கிறான்!” என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்த அவனை, “என்ன, ஸ்ரீமந் நாராயணமூர்த்தி! ஒரு முறையாவது ‘மகாலக்ஷ்மி’யுடன் நம் வீட்டிற்கு விஜயம் செய்யக் கூடாதோ?” என்று கேட்டுக்கொண்டே வரவேற்றான் ஹரிகிருஷ்ணன்.

“மகாலசுமியில்லை; அவளுடைய அக்கா!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான் நாராயணமூர்த்தி.

அங்கங்கே காணப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களும், விதம் விதமான மேஜை, நாற்காலி, ‘ஸோபா’க்களும் அவனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டிவிட்டன. அவற்றைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தன் வேட்டகத்தாரின் மீது கோபம் கோபமாய் வந்தது.

அடுத்த நிமிடம் ‘கம்’மென்ற மல்லிகை மணம் அவன் கவனத்தைக் கவர்ந்தது. அத்துடன் புத்தம் புதுப் பட்டாடை கட்டி நடப்பதனால் உண்டாகும் ‘சலக், சலக்’ என்ற சத்தமும் அவன் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தான்; சாட்டை போன்ற பின்னலை முன்னால் எடுத்துப் போட்டுக் கொண்டு, முகத்தில் முல்லையின் முறுவலுடன் லாவகமாக நடந்து வந்தாள் ஸ்ரீமதி ஹரி.

“இவளும் பெண்தானே, பார்ப்பதற்கு எவ்வளவு லட்சணமாயிருக்கிறாள்!” என்று தனக்குள் எண்ணி ஏங்கினான் நாராயணமூர்ந்தி.

அதற்குள் காப்பி வந்து சேர்ந்தது. அதை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே, “என்ன, ஹரி! இந்த ரேடியோவை எப்போது வாங்கினாய்?” என்று தன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான் நாராயணமூர்த்தி.

“உம்...நானாவது, வாங்கவாவது! சென்ற வாரம் இவளுடைய அப்பா இங்கே வந்திருந்தார். ‘சாயந்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/66&oldid=1149875" இலிருந்து மீள்விக்கப்பட்டது