பக்கம்:ஒரே உரிமை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைமேல் பலன்

89

தெரியலே!” என்று விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையே ஆரம்பித்தான் சின்னப்பன்.

“பிழைச்சாப் புழைக்கிறோம், செத்தாச் சாகிறோம்—முதல்லே விசயம் என்னான்னு சொல்லித் தொலையுங்க!” என்று செல்லம் கத்தினாள்.

“ஆமாம், செல்லம்! நீ சொல்றது சரிதான்! நாம் செத்தால் சாகிறோம், பிழைச்சாப் பிழைக்கிறோம்னுதான் எங்க முதலாளியும் நினைச்சுப்பிட்டாடு! அவரு உற்பத்தியைக் குறைக்கணும்னு இன்னிக்கு ஐம்பது பேரை வீட்டுக்கு அனுப்பி வைச்சுட்டாரு! அவர்களிலே நானும் ஒருத்தன்” என்று சின்னப்பன் விஷயத்தை ஒருவாறு சொல்லி முடித்தான்.

அவ்வளவுதான்; செல்லம் ஏனோ ‘குபீர்’ என்று சிரித்தாள்!

சின்னப்பன் அழுகையை நிறுத்தி விட்டு அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“கவலை வேணாம், போங்க! பட்டணத்துத் தலைவர் சொன்னபடி உற்பத்தியைப் பெருக்கினீங்க, கைமேல் பலன் கிடைச்சுது! அம்புட்டுத்தானே?” என்று சொல்லி விட்டு, அவள் மீண்டும் மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டே இருந்தாள்.

ஒ.—6
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/91&oldid=1149353" இலிருந்து மீள்விக்கப்பட்டது