உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. பந்தயம் பிறந்த கதை


கிரேக்க நாட்டிலே கடவுளுக்குக் குறைச்சல் இல்லை. வீரத்தில் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை விட, மதத்தில் அவர்கள் ஆழ்ந்த பற்றும், அதிக நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். அதனாலேயே, அழகு என அவர்கள் ரசித்ததற்கும், அலங்கோலம் என்று அருவெறுப்பு அடைந்ததற்கும்கூட உருவம் அமைத்தனர். அவற்றையெல்லாம் வல்லமை உள்ள 'கடவுள்' என்று வணங்கினர். அந்தக் கடவுளர்களுக்குத் தலைமை தாங்குவதுதான் 'சீயஸ்' என்னும் பெயரமைந்த கடவுள்.

'சீயஸ், கரானாஸ் என்ற இரண்டு தலைமைக் கிரேக்கக் கடவுளர்கள், பூமியை யார் ஆள்வது என்று போட்டி பிட்டனர். அந்தப் போட்டியில், சீயஸ் தன் பகைவனான கரானாவைக் கொன்று வெற்றி கண்டதற்காகவே இம் மாபெரும் போட்டியினைத் தொடங்கி வைத்தார்' என்பது ஒரு புராண் வரலாறு. பந்தயம் தோன்றியதைப் பற்றி “பிண்டார்” என்ற புலவரும், மற்றவர்களும் மேற்கூறிய கதையைப் பாடிவைத்துச் சென்றிருக்கின்றனர்.

'மதம் வாழ்க்கைக்கு முகம் போன்றது' என்று வாழ்ந்து வந்த கிரேக்க மக்களிடையே, ஒரு காலத்தில் மன வேற்றுமை எழுந்தது, மதக் குழப்பம் மிகுந்தது. இவ்வாறு குழப்பத்தால் துன்புறுகின்ற நேரத்தில் "பிளேக்" என்ற கொடிய நோயும் மக்களிடையே பரவி அழித்தது. வதைத்தது. அலறிப்புடைத்த மக்கள் ஆண்டவனைத் தொழுதனர். அந்நாளில், வானத்தில்