இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
போட்டி தொடங்கி விட்டது. பேரழகி ஹிப்போடோமியா பக்கத்தில் இருக்க, தேரிலே புறப்பட்டு விட்டான் பிலாப்ஸ், எல்லையைக் கடக்கப் போகிரறானா அல்லது ஈட்டியால் கொல்லப்படப் போகிறானா? இறைவனுக்கே வெளிச்சம்.
போட்டி பயங்கரமாகத் தொடங்கி விட்டது. தேர். புழுதி, மீற புறப்பட்டது. புயல் வேகத்தில் போகிறது. அவனது தேர், பின் தொடர்கிறது மன்னன் ஒனாமஸின் அழகுத் தேர். கையிலே ஈட்டி, கண்களிலே கொடுரம்: முகத்திலே கர்வம். ஏன்? உலகில் உள்ள குதிரைகளிலே தன் குதிரைகள் தான் ஒப்பற்றவை. வலிமையுள்ளவை. விரைவாக ஒடக் கூடியவை என்பது அவன் நம்பிக்கை. அவனுடைய ஈட்டி தான் அகில உலகிலும் கூர்மையானது. குறி தவறாதது என்ற ஒர் ஆணவ எண்ணம். குதிரைகள் பாய்கின்றனவா, பறக்கின்றனவா என்றவாறு மன்னன் தேர் முன்னேறி, முன்னே போகும் தேரை விரட்டிப் பிடிக்க, இரு தேர்களுக்கும் இடையேயுள்ள தூரம் குறைய, 'இதோ
பிடிப்பட்டான் பிலாப்ஸ்' என்ற நிலையிலே!
திடீரென ஒர் சத்தம்... ஆமாம்! மடமடவென்று அச்சாணி முறிந்தது, படபடவென்று சக்கரங்கள் பிய்த்துக் கொண்டு பறந்தோடின. மமதையோடு தேரோட்டிய மன்னன், முகம் குப்புற மண்ணிலே விழுந்தான். கழுத்து முறிந்து இறந்தான். பழி வாங்கப் பாய்ந்துவந்த மன்னன். பாதி வழியிலே விழுந்து பயங்கர விபத்துக்கு உள்ளானன். விதிதான் அவனே வீழ்த்தியதா? இல்லை......... சதியா? ஆமாம்! பிலாப்ஸின் சதி
பிலாப்சின் சதியல்ல...... . மதி. அவனது மதி செய்த சதி மன்னனது தலைவிதியை நிர்ணயித்தது. போட்டியிட வந்த பிலாப்ஸ், வீரத்தை மட்டும் பயன்படுத்தவில்லை. விவேகத்