பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பந்தயத்தில் பங்குபெற பயங்கர விதிமுறைகள்


மதச் சடங்கு போலவும் அதே சமயத்தில் வீர விழா போலவும் விமரிசையாகக் கொண்டாடப்பெறும் விளை பாட்டுக்களில் வீரர்கள் போட்டியிட வேண்டுமென்ருல், அதற்குரிய விதிகள் மிகவும் கடுமையாகவே இருந்தன. அந்த விதிகளைப் பின்பற்றுகின்ற வீரர்கள்தான் பந்தயக் களத்திற்குள்ளே நுழைய முடியும். பங்குபெற முடியும். விதிகள் அவ்வாறு கடுமையாக அமைந்திருந்தன.

போட்டியிலே கலந்து கொள்கின்ற வீரன், கலப் பற்றவகை, தூய்மையான கிரேக்கக் குடிமகனக இருக்க வேண்டும். நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்க இருக்கும் பந்தயங்களுக்காக, அவன் பத்து மாதங்கள் இடைவிடா முயற்சியுடன் சிறப்பான பயிற்சியும் செய்திருக்கவேண்டும். திருமணமானவர்கள். குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தன்னைத் தகுதியுடையவனுக மாற்றிக் கொண்ட வீரன், தன் பெயர், முகவரி, மற்றும் பரம்பரை பற்றிய உண்மை முழுவதையும் விளக்கி, எல்லிஸ் என்னும் இடத்திற்குச் சென்று, தன் பெயரைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். அந்தப் பெயர்ப் பட்டியலை வைத்துக் கொண்டு, 'கலே நாடிகை’ எனும் ஒலிம்பிக் அதிகாரிகள் பத்து பேர் அடங்கிய குழு ஒன்று முகவரி அறிந்து, வீரனைப் பற்றிய முழு உண்மைகளையும் பரிபூரணமாக ஆராய்ச்சி.