உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

.பந்தயக் களமும் பார்வையாளர்களும்


ஒலிம்பிக் பந்தயம் என்றால் கிரேக்க நாட்டு மக்களுக்கு மிகவும் விருப்பம். பந்தயம் நடக்க இருக்கும் நாளுக்கு, பல மாதங்களுக்கு முன்னமேயே பார்வையாளர்கள் தங்களை ஆயத்தம் செய்து கொண்டு விடுவார்கள். ஒலிம்பிக் பந்தயம் பார்ப்பது என்பது, புனிதமான இறைவன் ஆலயத்திற்குப் போய்வரும் மதச் சம்பிரதாயம் போன்று அவர்கள் எண்ணியே நடந்தனர், விழைந்தனர். பார்த்து மகிழ்ந்தனர். உழவர் முதல் உழைப்பாளிகள் வரை, உல்லாசபுரியில் வாழ்கின்ற செல்வர் முதல், அரசர்கள், வணிகர்கள் வரை அத்தனை பேரும் பந்தயம் பார்க்கக் கூடி விடுவார்கள். ஒலிம்பியா பள்ளத் தாக்கு முழுவதுமே கூடாரமாகத்தான் காட்சியளிக்கும். ஒலிம்பிக் போட்டிகள் கோடை காலத்தில், அதாவது ஏப்ரலில் இருந்து ஜூலை மாதம் வரை உள்ள இடைப்பட்ட நாட்களில் தான் எப்பொழுதும் நடந்தன. பார்வையாளர்கள் அனல் கக்கும் வெயிலில் அமர்ந்து கொண்டு, அவதிப்பட்டுக் கொண்டே ஆனந்தத்துடன் பந்தயங்களைப் பார்த்து மகிழ்ந்தனர்.

எங்கும் இளமை பவனிவரும் இன்ப நேரமல்லவா ? எங்கும் எழுச்சியும் மகிழ்ச்சியும்தான் எதிரொலிக்கும், தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின்போதும், ஏறு தழுவும் விழாவின்போதும் நம் தமிழகக் காளையர்கள் நடந்துகாள்ளுவது போலத்தான்.