6
.உறுதியான உடல் வந்த காரணம்
பந்தயங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளகளைத் தேர்ந்தெடுக்கும் கடுமையான சூழ்நிலையையும், கட்டுப்பாடு நிறைந்த விதிகளையும் முன் கண்டோம். அதே சமயத்தில், போட்டியாளர்களிலே உள்ள வீரர்கனை 'வாலிபர்கள், 'மனிதர்கள்' என்று இரு பிரிவாகப் பிரிக்க அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். காரணம், அவர் களுடைய உடல் வளர்ச்சியே. ஆகவே வயது வித்தியாசத்தில் அவர்களால் பிரிக்க முடியாததால், அவர்களது உடல் வளர்ச்சியை உன்னிப்பாக உணர்ந்து, ஆராய்ந்த பிறகுதான் . பகுக்க முடிந்தது. இவ்வாறு உடல்திற நிலயில் கிரேக்கர்கள் வலிமையோடும், வனப்போடும் வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று அறிந்தோமானால், நாம் உண்மை விலேயே வியப்பில் மூழ்கி விடுவோம். கிரேக்கர்களின்
வாழ்க்கைமுறை அப்படி வரை முறையோடு இருந்தது.
குறையுடலோடு பிறந்தாலும், நோயோடு தோன்றி குலும், அக் குழந்தைகள் சமூகத்திற்கும், இனத்திற்கும் இழுக்கு என்று வாளால் கொன்று புதைத்தத் தன்னிக ரில்லா தமிழினம் போன்று. கிரேக்கர்களும், ஓர் உயர்ந்த முறையைக் கையாண்டார்கள். "குழந்தை பிறந்த ஒருசில நாட்கள் கழித்து, பெற்றோர்கள் அந்நகரத்தை ஆளும் பெரியவர்களிடம் கொண்டு சென்று தங்கள் குழந்தையைக் காட்டுவார்கள். ஆய்வுக்காக வந்த அக் குழந்தையை ஆவலோடும் ஆராய்ச்சிக் கண் கொண்டும் பார்த்து. அக் குழந்தை