பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


வைக்கின்றீர்களே என்று குத்துச்சண்டை வீரர்கள் இதயம் குமுறி, எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிகுந்துகொண்டே தான் வரலாயின. அதனால், ஒரே நாள் நடந்துவந்த பந்தயம். கி. மு. 5-ம் நூற்றாண்டில், 5 நாள் பந்தயமாக மாறியது.

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இப்பந்தயங்களே அமைதியின் சின்னம் என்றே எல்லோரும் கருதினர்: அதற்குரிய காலமும் பத்துமாதம் என்றே கூறினர். தங்களுக்குள்ளே ஆயிரம் வேற்றுமையும் விரோதமும் நிறைந்திருந்தாலும், பந்தயங்களை மிக மிகப் பக்தியோடும் பண்போடும் கிரேக்கர்கள் நடத்தி மகிழ்ந்திருக்கின்றனர்.