பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. ஐந்து நாள் விழா !

 ஐந்து நாட்கள் பந்தயங்கள் எத்தனை விமரிசையாக நடத்தப்பெற்றன என்று அறியும் ஆவல் அனைவருக்கும் எழுவது இயற்கைதான். கி. மு. 452-ஆம் ஆண்டு நடை பெற்ற ஒலிம்பிக் பந்தயம் பற்றிய குறிப்பை ஒரளவு அறிந்தால், அக்காலத்திய மக்களின் ஆர்வமும், ஆண்மைப் பெருக்கும் ஆற்றலும் நமக்கு நன்ருகப் புரியும்.

பந்தயத்தின் முதல் நாளன்று, போட்டியிடும் பயிற்சி மிக்க வீரர்கள், அவர்களது தந்தையர், சகோதரர்கள்.அதிகாரிகள் அனைவரும் சீயஸ் 3டத்தின் முன்னே அணிவகுத்து நின்று, பன்றி tத்த்த்தின் மீது சபதமும் சத்தியமும் செய்து கொள்கின்ற

இரண்டாம் நாளில்தான் எழுச்சிமிக்கப் போட்டிகள் நடைபெறும், காலையில் குதிரைப் பந்தயமும், தேர் ஒட்டப் போட்டியும், மாலையில் முக்கியமான உடலாண்மை நிகழ்ச்சிகளாகிய ஓட்டம், தட்டெறிதல், வேலெறிதல்,குடை ஏற்றிக்கொண்டுத் தாண்டுதல். மல்யுத்தம் போன்றவற்றில் விறுவிறுப்பு மிகுந்த போட்டிகளும் நடைபெறும்.

முன்னரும் நாள், வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் பரிபூரண ஒய்வு நாள் அதாவது,

ஒலிம்பிக்-3