- “இறவாத புகழுடைய புதுநூல்கள்
- தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"
என்று புதுமைக் கவி பாரதியார் அன்று பாடினர்.
அக் கவிஞரது பாட்டுக்கு ஒர் எடுத்துக்காட்டாக இன்று விளங்குகிறது நண்பர் நவராஜ் செல்லையா எழுதிய 'ஒலிம்பிக் பந்தயத்தின் கதை’ என்ற நூல்.
தமிழில் தேர்ந்த புலமையும், விளையாட்டுத் துறையில் ஆழ்ந்த அனுபவமும், அதிக ஈடுபாடும், எழுச்சி மிக்க எழுத்துதாற்றலும் இருந்தால்தான். இறவாத புகழுடைய பல புதுநுல்களைத் தமிழ் மொழியில் இயற்றத்தர முடியும்.
விளையாட்டு இலக்கியத் துறை, தமிழுக்குப் புதிய துறை இறவா வரம் பெற்ற விளையாட்டுக்களை இனிய தமிழில் கொண்டுவர, அத்துறையில் மிகுந்த ஆர்வமும் அனுபவமும், திறமையும் பொறுமையும் வேண்டும். அதிலும், பன்னாட்டாரும் பாராட்டிப் போற்றிப் புகழ்கின்ற ஒலிம்பிக் பந்தயத்தின் வரலாற்றைத் தமிழில் சுவையாக படித்துத் தரவேண்டுமானால் அது ஒர் அரிய பெரிய முயற்சிதான் என்பதில், எள்ளளவும் ஐயமே இல்லை.
"அகில உலக நாடுகள் அனைத்தும் அமைதிேயாடும் அன்போடும், நேசத்தோடும், ஆனந்தத்தோடும் ஒன்ருதச் சர்ந்து வாழ வேண்டுமானால் அதற்குப் பாலமாக அமைவது --விளையாட்டுகளாகத்தான் இருக்க முடியுமே தவிர வேறு எந்த எதனாலும் முடியுவே முடியாது."