இவ்வாறு ஆர்வத்துடன் உடல் அழகைப் பெருக்கி, ஆண்மையைக் காத்து. திறமையை வளர்த்து பதிணோரு மாதங்கள் கடுமையான பயிற்சி செய்து, ஒலிம்பிக் பந்தயுத்தில் வெற்றி பெற்றால்-என்ன பரிசு தந்தார்கள் என்று. கேட்கலாம் பரிசு என்பது இலையும் மலரும் கொண்ட ஒர் மலர் வளையம். ஆலிவ் என்ற மரத்தின் இலக்குச்சி மலர்களால் ஆன மலர் வளையம் ! மலர் வளையமா? இதற்கா இத்தனைப்பாடு ? இதற்காகவா இத்தனைப் போராட்டம் ! ஆர்ப்பாட்டப் ஆலிவ் மலர் வளயத்திற்கா இத்தனை ஒட்டம் ! கூட்டம் எல்லாம் ? ஆமாம்! அங்கேதான் கிரேக்கர்களின் தெய்வபக்தியே நிறைந்து கிடக்கிறது. சிறந்து விளங்குகிறது.
புதிய ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றி பெற்ற வீரர்களுக்குத் தங்கப் பதக்கங்களும். வெற்றியைத் தொடர்ந்தோர்களுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் கொடுக்கின்றார்கள். ஆனால், முன்னுள் ஒலிம்பிக் பந்தயத்தில் ஆலிவ் மலர் வளையம் மட்டுமே. சூட்டி மகிழ்ந்தார்கள். ஆலிவ் மலர்வளையம் செய்யப் பயன்படுகின்ற ஆலிவ் மரங்கள். தற்போது 'ரூபியா என அழைக்கப் பெறும் ஆல்பியஸ் என்ற ஆற்றின் கரையிலே வளர்ந்தவை.அவை, சிறப்பும் தெய்வாம்சமும் மிகுந்த சியஸ் கோயிலின்,அருகிலேவளர்ந்தமையால், மேலும் புனிதத் தன்மைபெற்று. விகங்கின.அந்த ஆலிவ் மலர் வளையத்தை மணி முடியில்தாங்கிய வெற்றி வீரன். மாபெரும் புண்ணியம் செய்தவன்.