48
என்று மக்களால் மதிக்கப் பெற்ருன். பாராட்டம் பெற்றுன்.
ஆலிவ் மலர் வளையம் சூட்டப்பெற்ற வீரன், அவன் பிறந்த நகரத்திலே சிறந்த பெரிய மனிதனுகக் கருதப் பட்டான். அவனுக்கு மக்கள் தந்த அன்பளிப்புகள். அரும் பரிசுகள் அனைத்தும் மலைபோல் குவிந்து கிடக்கும். நகரத்தைச் சுற்றி மதில்களும், மக்கள் நுழைந்து உள்ளே வர பெரிய வாயில்களும் உள்ள அந் நகரத்திலே இந்த ஒலிம்பிக் வீரன் உள்ளேவர. பலர் பயன்படுத்தும் வாதையில் வராமல், நெடிதுயர்ந்க மதிலில் நுழைவாயில் ஒன்றை அமைத்து, தனியாக அவ்வீரனை மட்டும் வாச் செய்வார்களாம். இவ்வாறு தனி வழியே செல்லும் இனிய புகழ்கொண்ட அந்த எழில்மிகு வீரனுக்கு, காலமெலாம் உணவும், உடையும். உறங்க இல்லமும் இலவசமாகவே கிடைக்கும். இத்தனேக்கும் மேலாக, இன்னுமொரு பெருமையும் கிடைக்கும். வெற்றி பெற்ற வீரனின் பெயரைத் தெருக்களுக்கும் சூட்டுவார்கள் நகரத்தார்கள். அவன் வாழ்க்கையிலே ஓர் உயர்ந்த நிலையை அடைந்த் விடுகிருன் என்பதைக் காணும் மக்கள், ஏன் ஒலிம்பிக் பந்தயத்திற்காக உயிரைக் கொடுத்துப் பழகமாட்டார்கன் ! வயிற்சி செய்ய மாட்டார்கள் ? நாடே போற்றும் நிலையை வீரர்களிலே வெற்றி பெற்றவனக் கண்ட ஒருவன், தன் நண்பனைப் பார்த்துக் கூறுகிருன் !
"உனக்கு வந்த புகழும் பொருளும் அளவு கடத்த இவாழ்க்கையில் பெற முடியாத இன்பத்தை யெல்லார் பெற்றுவிட்டாய். இனி நீ இறந்துபோகுலும் பரவாயில்கல்" என்று அவன் அடைந்த சுகத்தின் அளவை வருணிக்கும். தன்மையைப் பார்க்கும்போது, வெற்றி வீரன் பெற்ற பெரும் புகழ் இனிதே நமக்கு விளங்கும்.