உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரனுக்குப் புகழ் நிரம்பும். சில எழும்பும்.அவனைம் புகழ்ந்து பாடல்கள் பிறககும். இத்தனையும் வெற்றி விரனுக்குத்தான்.


ஒலிம்பிக் பந்தயத்திலே கலந்து கொண்டு தோற்ற வனுக்கு என்ன கிடைக்கும் என்று நிணைக்கிறீர்கள்? தலை குணிவுதான்: அவமானம்தான். "சரிதான் கிடக்கட்டும்: என்ற சமாதானம் கூட கூறவேண்டாம்!....எவரும் ஏறெடுத்ப் பார்க்க மாட்டார்கள்....ஏளனப் பார்வை எதிரே வந்து அவர்களை அம்பாய் குத்தும். புன்னகை புரிவோர் கூட இருக்க மாட்டார்கள் என்ற இழி நிகல ஏற்படும். அந்த அளவுக்குத் தோல்வியை அவர்கள் எதிர்த்தார்கள். பகைத்தார்கள்.

தோற்றவர்கள் படுகின்ற பாடுதான் அவர்களுக்குத். தெரியுமே! தோல்வியை வீரர்கள் தாங்கிக் கொண்டாலும் அவன் வசிக்கின்ற நகர மக்கள் விரும்ப மாட்டார்கள். தோல்வியைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று போட்டியிடும் வீரர்களுக்கும் தெரியும்! சீயஸ் கோயில் முன்னே. பன்றி ரத்தத்தைத் தொட்டு, "நாங்கள் வெற்றி பெறுவதற்காகக் குறுக்கு வழியை. கீழ்த்தரமான செய்கைனைப் பின்பற்ற மாட்டோம்" என்று வாக்குறுதி கொடுத்திருந்தாலும்கூட,ஒரு சிலர் வெற்றி பெறுவதற்காக இறுக்கு வழியைக் கையாளாமல் இல்லை.

98வது ஒலிப்பிக் பந்தயம் நடந்தப்போது ஒரு நிகழ்ச்சி. இத்துச் சண்டையில் கலந்து கொண்ட எபிலஸ் என்று நீரன், தன்னுடன் போட்டியிடுவதற்காக இருந்த மூன்று பேர்களுக்கு லஞ்சம். கொடுத்து, தன்னுடன் போட்டியிட வேண்டாமென்றும், தன்னை வெற்றி வீரனுக (Champion) நீக்கி உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.