பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

லிருந்தே பங்கு பெருமன் நீக்கி வைத்திருந்தார்கள் அதிகாரிகள் ஆனால், அவன் ஆற்றலயும் வெற்றிபெறும் விவே கத்தையும் கண்ட அந்நகர மக்கள். அவனுக்கு சிலை ஒன்றைச் செய்த வைத்திருந்தார்கள் அந்தச் சிலையைக் நீண்டு, ஆத்திரமடைந்த ஒரு வீரன், ஏற்கனவே தியாஜனி சிடம்தோற்றவன் தான். 'அவனுக்கா சிலை' என்று ஆத்திரம். கொண்டு இரவிலே சென்று, அச்சிலையை உதைத்து உடைத்தான். உடைந்துபோன அச்சில. அவன்மீதே விழ, அவன் அதே இடத்திலே நசுங்கி இறந்து போனான். அதைக் கண்டு. சிலையான பிறகும் கூட. தன் எதிரியைக் கொன்று வீழ்த்தும் ஆற்றல் தியாஜனிசிடம் தான் உண்டு. என்று கூறி அந் நகர மக்கள் மகிழ்ந்தனராம். எப்படி கதை !

பங்கரர்சியம் (Pancretium) என்பது ஒரு போட்டி. அது குத்துச் சண்டையும், மல்யுத்தமும் கலந்த ஒன்று. அதற்கென்று குறிப்பிட்ட விதிகளே கிடையாது. எந்த முறைகளையாவது பின்பற்றி எதிரியை வீழ்த்தவேண்டும். 'யார் ஒருவன் கடைசியாகத் தன் கையை உயரே தூக்குகிறானே அவன் தன் தோல்வியைத் தானே ஒப்புக் கொண்டதாக அர்த்தம்’ என்பது தான் விதி. இந்தப் பயங்கரப் போட்டியில்ே. இதற்குமுன் நடந்: திருந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வீரகைத் திகழ்ந்த 'அரேசியன்' என்பவன். இந்தப் பந்தயத்திலும் கலந்து கொண்டு, மீண்டும் வெற்றி பெறத் துடித்துக்கொண்டிருந் தான். போட்டி ஆரம்பமாயிற்று. இருவரும் வீராவேசத் தோடும். இரைமீது பாய்கின்ற புலிபோலும் போரிட்டனர்.

அரேசிய்ன்"தான் பலவாகுயிற்றே! ஆகவே, அவன் தன் எதிரியின் காலப் பிடித்துக் கடுமையாக முறக்கிக் கொண் டிருந்தான். எதிரியோ, அவன் கழுத்தைப் பிடித்து அழுத்தி நெறித்துக்கொண்டிருந்தான். அந்தப்பிடி இறுகியதன்