பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11. வலிமையும் திறமையும்


ஒலிம்பிக் பந்தயம் மத சம்பந்தமான நிகழ்ச்சி என்று முன்னரே குறிப்பிட்டோம். அதே நேரத்தில், உடல் வலிமைக்கும் உன்னத இடத்தை அளித்து, உயர்ந்த நோக்கத்தோடு இயங்குகின்ற ஒப்பற்ற பந்தயம் என்றும் கூறினோம். அவ்வாறு உடல் வலிமை பெற்று வாழ்ந்த வீரர்கள் ஒருசிலரைப் பற்றி வரலாறுகள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

போலிடோமஸ் என்ற வீரன் ஒருவன், வெறுங் கையாலேயே ஒரு சிங்கத்தை அடித்துக் கொன்றான் என்றும், காலாலேயே ஒரு காளை மாட்டை மிதித்துக் கொன்றான் என்றும், வெகுவேகமாக ஓடிய தேரை பின்னிருந்து இழுத்து நிறுத்தினான் என்றும் வரலாறு கூறுகின்றது. அது உண்மையோ பொய்யோ, எப்படி இருந்தாலும் உடல் வலிமைக்கு அவர்கள் மிகவும் முக்கியத்வம் அளித்தனர் என்பது மட்டும் நமக்கு நன்கு புலனாகின்றது.

உடல் வலிமையால் மட்டுமல்ல, உணவு உண்ணுவதிலும்கூட அவர்கள் பெரிய அசகாய சூரர்களாகத்தர்ன் திகழ்ந்திருக்கின்றன ர். கி. மு. ஆறாம் நூற்றாண்டில், மிலோ என்ற ஒர் மல்யுத்த வீரன் 6 முறை ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். அவன் ஒருவனே, ஒரு காளை மாடு முழுவதையும் ஒரே சமயத்தில் தின்றான் என்றும் கூறுகின்றனர். . ஒலிம்பிக்-4