பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. ஒலிம்பிக் பந்தயங்களின் வீழ்ச்சி



உதயமாகி, ஒளிதந்து. உலகைக் காத்து, ஒப்பற்ற மகிழ்ச்சியில் மக்களே ஆழ்த்திய சூரியன், ஒளி கறைந்து உலகை விட்டே மறைந்து போவதுபோல், கற்பனையில் காணுகின்ற இன்பங்கள் அனைத்தையும் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தி. காட்சியாக்கி, மாட்சிமை நிறைந்த மனிதகுலத்தின் சக்தியை மன்பதைக்கு, வெளிப்படுத்திக் களித்த கிரேக்க மக்களுக்குக் காலம் கடும் சோதனையைக் கொடுத்தது. அருகே இருந்த ரோமானிய சாம்ராஜ்யம் புகழிலும், பெருமையிலும், வலிமையிலும், வாழ்க்கைத் தரத்திலும், நாகரீகத்திலும் மேம்பாடடையத் தொடங்கிய போது, கிரேக்க நாடு பீடிழந்தது. பெருமையிழந்தது. ஆமாம். கிரேக்கர்களே வென்று. ரோமானியர்கள் ஆளத் தொடங்கினர். நாட்டின் சரித்திரப் பெருமை சிறப்பாற்றல் நலியத் தொடங்கவே, மக்களின் மனதிலே மாபெரும் பெரு மையுடன் மங்கலப் பொருளாய் வீற்றிருந்த விளையாட்டு களின் மகிமையும் நலியத் தொடங்கியது.

விளையாட்டுக்களிலே மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண் டிருந்தனர் என்பதை நாம் அறிந்திருந்தாலும். இதோ இந்த சான்றினைப் படித்துப் பாருங்கள். விளையட்ர்டு வீரர்களின் திறமையைக் கேளுங்கள். எல்லா வீரர்களுமே, எல்லா போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றனர். போட்டியிடு கின்ற அத்தனை வீரர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு