55
இந்த நிகழ்ச்சிதான் வரும் என்பதே தெரியாது. வரை பறையோ விதிமுறையோ கிடையாது என்றாலும், அவர்கள் ஆர்வத்துடன் அயராது போட்டியிட்டனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு உடலில் நெஞ்சுரமும், பேராற்றலும் நிறைந்திருந்தன.
முதலாவதாக, எல்லோரும் நீளத்தாண்டலில் பங்கு பெற்றனர். அதிலே குறிப்பிட்ட அளவு தாண்டியவர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே வேலெறியும் போட்டியில் (Javelin. Throw) கலந்து கொள்ள அனுமதிக்கப் பெற்றனர். அவர்களிலே அதிக தூரத்தை எறிந்த நான்கு பேர்களே விரைவோட்ட த்திற்குத் (Sprint) தேர்வு செய்யப் பெற்றனர். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முதலா "வதாக வந்தவர்களத் தேர்ந்தெடுத்தவர்கள், விரை வோட்டம் ஒடியபிறகு, மூன்று பேரை மட்டுமே சிறந்தவர்கள் என்ற தெரிவு செய்தனர். இவ்வாறு முன்னால் ஒடிவந்த மூன்றுபேர் மட்டுமே நான்காவது நிகழ்ச்சியான தட்டெறியும் (Discus Throw) போட்டிக்கு அனுமதிக்கப் பெற்றனர் இந்நிகழ்ச்சியிலும் இறுதியாக அதிக தூரத்தை எறிந்த இருவரும் வெற்றி வீரர்களாகக் கருதப்பட்டனர். இந்த இருவரும் 'வெற்றி வீரன்’ (Champion) எனும் விருதைப்பெற "மல்யுத்தம்’ செய்தனர் அதில் வெற்றி பெற்றவனே விரன்' என அழைக்கப் பெற்று பாராட்டப்பெற்ருன், பரிசளிக்கப் பெற்ருன். ஆக, ஒரு போட்டியிடும் உடலாளன் (Athlete) வெற்றி. வீர கை வர, அவன் நீளத் தாண்டல், வேலெறிதல், விரைவோட்டம் ஒடுதல், தட்டெறிதல், மல்யுத்தம் செய்த்ல் என்ற ஐந்து நிகழ்ச்சி ளிேலும், வெற்றி: பெறவேண்டியிருந்தது. இவ்வாறு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு வீரனுக்குப் பரிசு மட்டும் அல்ல. சிறப்புப் பரிசும், தந்து கெளரவித்தார்கள். அதுதான் அவனைப் போன்ற சில சமைத்துப் பெருமைப் படுத்தியது