உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


ரில்லாமல் தரணியிலே வாழ்ந்த தமிழர்களின் கொள்கை, "தாயே தன் குழந்தைக்கு நஞ்சு ஊட்டினுல் தடுப்பார் யார் ? என்பது போல, ஆண்டவன் திருத்தலத்தோடு தொடர் புள்ள அரங்கத்தில், அருமையான விதிகளையுடைய பந்தயங் களே அரசனே மாற்றினன் என்ருல், மக்கள் எப்படி மதிப்பார்கள் ? `ரோம் எரியும்போது பிடில் வாசித்தான் நீரோ' என்பார்களே. அதே நீரோதான், கிரேக்கர்கள் கட்டிக், காத்த, கண்ணுன கோட்டையை மண்மேடாக்கினன். அவ்வாறு அவன் என்ன செய்தான் ?

, நீரோ என்ற அந்த மன்னன், பந்தயத்தில் போட்டியாளகைப் பங்கேற்று, பல வெற்றிகளைப் பெற்றிருக் கின்றன் ! எப் படி ? அங்கேதான் மன்னனின் மரபாககச் செயலும் அடாவடித்தனமும் அடங்கிக் கிடக்கிறது. சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த சிநீரோ மன்னன், தன்னுடைய ஆட்சியின் கீழ் அடங்கிய கிரேக்க மண்ணிலே ஒலிம்பிக் பந்தயம் நடக்கம் பொழுது , தானும் பங்கு பெறுவான். தனக்சள்ள 5000 மெய்க்காப்பாளர்களோடு அவன் போட்டியிடுவான். போட்டியிடும் அத்தனை பேரும். மன்னனுக்கு வேண்டியவர்கள். அவர்கள் போட்டியிடுவது போல 'பாவனே செய்வார்கள். கடைசியாக, போட்டியில். வெல்பவன் நீரோவாகத்தான் இருப்பான். இப்படி யாக எல்லாப் போட்டிகளிலும், தான் கலந்துகொண்டு அத்தனைப் போட்டி நிகழ்ச்சிகளிலும் அவனே முதலாவதாக வந்தான். தன்னைத் தவிர. வெற்றி வீரன் வேறு யாரும் இல் அல. வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற ஒர் இழிந்த சூழ்நிலையை உண்டுபண்ணி விட்டான். அது மட்டுமல்ல: ஒலிம்பிக் போட்டிகளிலே இல்லாத புதிய புதிய போட்டி நிகழ்ச்சி ఉ&r, அவ்வப்போது, தனக்கேற்ற வகிையில், தன க்கேற்ற முறைகளில் உண்ட்ாக்கியும். மாற்றி அமைத்தும் வெற்றி. பெற்றன். அவன் இசைப் போட்டியில் வெற்றி பெற்றன். சிறந்த பாடககை வெற்றி பெற்றன். சிறந்த வீரகைக்கூட வெற்றி பெற்றன். அவன் தேர் ஒட்டப் போட்டியிலும்