உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத் தது. ஒலிம்பிக் பந்தயத்தின் பீடும் பெருமையும் . சீரும் சிறப்பும் எல்லாம் காலத்தால், மனிதனின் ஆங்காரக் கோலத்தால் அழிந்தன. அடுத்தடுத்து ரோமை ஆண்ட அரசர்கள் . பந்தயத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்பட கூட இல்லை. பதினைந்து நூற்றாண்டுகள் பறந்தோடின. ஒலிம்பிக் பத்தாம் என்று ஒன்று இருக்கதாகவும், அது கிரேக்க நாட்டிலே நடந்ததாகவும் மக்கள் பேசிக் கொண்டனர். ஒரு சில குறிப்புக்கள் அவர்களுக்கு உதவின. பழைய ஒலிம்பிக் மறைந்தாலும், அது கிரேக்க நாட்டுக் குள் ளே அடைபட்டுக் கிடந்து அழிந்தாலும், இன்று அகில உலகமெங்கும் பீடு நடை போட்டு வருகிறதே? எவ்வாறு புதிய ஒலிம்பிக் பந்தயம் பிறந்தது, வளர்ந்தது என்ற கதையை இனி காண்போம்