70
யுடன் ஒலிப்பிக் பந்தயங்களை வெற்றிகரமாக ஏதென்சில், நடத்த முயன்ருர்கள். இவாஞ்சலீஸ் ஸப்பாஸ் என்ற கிரேக்க செல் வந்தர் கொடுத்த பெருங்கொடையின்: மூலமாக, இருமுறை நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களும்: திட்ட மிட்டு செயல்படாத முறையினால், கவனக்குறைவினால்; முறைதவறிய செயல்களினால் குழப்பத்திலே முடிந்தன: கூடிய கூட்டமும், பங்கெடுத்துக் கொண்டவர்களும் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததனால் கிரேக்கர். களிடையே ஆர்வம் குறைந்து காணப்பட்ட து என்றே. எல்லா நாட்டினரும் எண்ணினர். "கிரேக்கர்களாலே, கிரேக்க நாட்டிற்குள்ளேயே, ஒலிப் பிக் பந்தயங்களே நடத்த முடியவில்லை என்ருல். உலக நாடுகளுக்கிடையே ஒலிம்பிக் பந்தயங்களை எவ்வாறு நடத்த முடியும' என்ற கேள்விகள் உலகமெங்கிருந்தும் கணையாக வந்து கூபர்டினே தாக்கத் தொடங்கின.
“நானே இந்த முழு விழாவுக்கும் பொறுப்பாளி” என்று. பியரி கூபர்டின் அறைகூவல் விடுத்தார். அடக்கமாக அல்ல. ஆவேசமாகவே தான் அனைவருக்கும் கூறி ர்ை. கிரேக்கர்கள் செய்ய இயலாத ஒன்றை, அனத்துலகுக்கும் தான் செய்து, க ட்டவேண்டும் என்ற ஆவேசத்துடன் அவர் பணியாற்றத் தொடங்கினர்.
1892-ம் ஆண்டு, ஒலிம்பிக் பந்தயத்தை அதாவது. கிரேக்க நாட்டிலே கிரேக்கர்களுக்கு மட்டும் என்று இருந்த ஒலிம்பிக் பந்தயத்தை, உலக அரங்கிலே நடத்த வேண்டும். என்ற தனது தணியாத ஆசையை, பிரெஞ்சு நாட்டின், விளையாட்டு வீரர்கள் மத்தியிலே வெளியிட்டார். அவர்கள். அவரது கருத்தை ஆமோதிக்கவுமில்லை; ஆதரிக்கவுமில்லை : பயன் ஏதும் வி8ளயவில்லை என்ற உடன் . அவர் படபடக்கவும் இல்லை. பதைபதைக்கவும் இல்லை. தனக்கு ஏற்பட்ட் 'ஏமாற்றத்தை ஏமாற்ற, இக்கருத்தை உலககெங்கிலும்