வீரர்களை] உடலாளர்களே அழைப்பதென்றும் செய்தனர்.
உலக நாடுகளுக்குப் பியரி விடுத்த அழைப்பினுக்கு செவிமடுத்தவை சில நாடுகளே. அவைகள் அமெரிக்கா. இங்கிலாந்து. ஸ்வீடன், ஸ்பெயின், இத்தாலி. பெல்ஜியம், ரஷ்யா, கிரேக்கம், பிரான்சு போன்ற நாடுகளே. பங்கு பெற்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டத்திலே, தனது கொள்கையை விளக்கி, அழகான சொற் பொழி வாற்றினர். 1900ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு உடலியற் கல்விக் கழகத்தின் சார்பாக, ஒலிம்பிக் பந்தயம், பிரான்சு நாட்டில் நடைபெற இருக்கிறது என்று தனது முடிவையும் கூறினர். ஒலிம்பிக் பந்தயத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஏகமனதாக ஒத்துக் கொண்ட பிரதிநிதி கள், எந்த இடத்தில் பந்தயம் நடைபெற வேண்டும் என்கிற பொழுது, விவாதம் செய்யத் தொடங்கினர். கிரேக்க நாட்டுப் பிரதிநிதியின் கோரிக்கைக்கு, மற்ற நாட்டுப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவிக்கவே. பியரியும் ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று, பியரியின் ஒப்புதலின்படியே, ஒலிம்பிக் பந்தயம் 1896 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டிலே நடைபெற வேண்டும் என்று எல்லோரும் முடிவு செய்தனர்.
இவ்வளவு பெரிய காரியத்தை எப்படி சாதிக்கப் போகிருர்கன் பார்க்கலாம்” என்று எட்டி ஒதுங்கிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தவர்கள், விநயத்தோடு பேசியவர்கள். 'இது முடியக்கூடிய காரியமா' என்று மூலையில் இருந்து முனகியவர்கள்; மலையைக் கிள்ளி. எலியைப் பிடிக்கப் போகிருர்கள்’ என்று முன்விட்டுப் பின்பூேசிய முயற்சி முடவர்கள் அத்தனை பேரும் வாயடைத்துப் போக, விழா நடத்தும் பொறுப்பை கிரேக்க நாட்டுப் பிரதிநிதி ஏற்றுக்கொண்டார்.