உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

 உலகமே வந்து கூடுகின்ற ஒலிம்பிக் பந்தயத்திற்காக அரங்கம், அதற்காக ஆடுகின்ற செலவுகள் அனைத்திற்கும் என்ன செய்வது? திடகாத்திரமான கிரேக்கர்கள் கூட திணறிப் போய்விட்டார்கள். இளவரசரின் ஈடிலா முயற்சியும் சேவையும், அந்த நிலையை மாற்றியது பன்னி ரெண்டு பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து, பணம் திரட்டும் பணியை தொடங்கினார். 8 முறை அஞ்சல் தலைகளை அரசாங்சமே வெளியிட்டும். செல்வந்தர்களை யும். வணிகர்களையும் தாராளமாகக் கொடை வழங்கச் செய்தும், கோடிக்கணக்காக ரூபாய்களைத் திரட்டினார் கள். எத்தனையோ எண்ணற்ற தான தருமங்களை ஏதென்ஸ் நகரம் முழுவதிற்கும் எடுத்தீந்து இன்னல் தீர்த்த பேருபகாரி. கொடை வள்ளல் 'ஜார்ஜ் ஆவராப்' என்பவர் கோடி கோடி யாகப் பணத்தைக் கொட்டிக்கொடுத்தார் கொடையின் பலத்தால் கொள்கை உயர்ந்தது குன்றுகளுக்... கிடையே ஒலிம்பிக் பந்தய அரங்கம் கோட்டையென எழுந்தது. முன்னே ஒலிம் பிக் நடந்த ஒலிம்பியாவிலேயே பந்தய அரங்கம் எழுப்பலாம் என்ற ஓர் திட்டம் அது படு பன்ளமாக இருந்து விட்டதால் பயனளிக்கவில்லை. ஆகவே, அதை ஏதென்ஸ் நகரத்திலேயே அமைத்துப் பந்தபங்களை நடத்திவிட, அரங்கத்தை நிர்மாணித்து, ஏற்ற பல காரியங். களையெல்லாம் எழிலுறச் செய்து, கிரேக்கர்கள் காத். திருந்தனர்.

இதற்கிடையில், பியரி கூபர்டின் தன் இடைவிடா பணியைச் செய்துகொண்டே இருந்தார் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள விளையாட்டுக்களை நடத்தும் பொறுப் பேற்றிருக்கும் தலைவர் களுக்கு, ஒலிம்பிக் பந்தயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மீண்டும் தொடங்க இருக்கும் பந்தயங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தருமாறும் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார் - எல்லாம் பாலைவனத்தில் பெய்த மழைபோல் ஆயின. அயல்நாட்டுச், செய்தித்தாள்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள் கூட .