பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


ஏதோ ஒரு மூலையில்தான் இடம்பெற்றனவே தவிர, முதல் பக்கத்திலே, முதன்மையான இடத்திலே வரவில்லை. இவ்வாறு எதிர்பார்த்த ஒத்துழைப்பும் இயல்பாகக் கிடைக்கவில்லை என்ற நேரத்தில், ஒலிம்பிக் கமிட்டியில் இடம் பெற்ற நாடுகளின் பிரதிநிதிகள் கூட, அந்தாட்டை ஆள்வோர்களுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கேளாக்காதர்களாக ஆகிவிட்டக் கோலத்தைக் கண்டு, கொஞ்சம் அதிர்ச்சி அடையத்தான் செய்தனர் பிரபு, கூபர்டின் பேரழைப்பை ஏற்றுக்கொண்ட நாடுகள் முடிவில். செயலில் இறங்கவில்லை நூற்றுக்கணக்கான அரசுகள் இருந்தும்கூட, நேர்மையான நியாயமான இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த நாடுகள் ஒன்பது தான் என்று எண்ணிப் பார்க்கும்பொழுது. எவ்வளவு வேதனை இருந்திருக்கும்? அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன், ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா, கிரேக்கம் பிரான்சு போன்ற ஒன்பது நாடுகளில் இருந்து 59 பேர்கள்தான் போட்டியில் பங்கு கொண்டனர். துருக்கியர்களின் பிடியிலிருந்து விடுதலைபெற்ற கிரேக்கத்தின், எழுபத்தி ஐந்தாவது சுதந்திர தின விழா நாளான 1896-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8.ந்தேதி, ஏதென்ஸ் நகரத்திலே, பதினைந்து நூற்றாண்டுகள் கழித்து, புதிய ஒலிப்பிக் பந்தயம் துவங்கப்பெற்றது. வானமே மகிழ்ந்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்தது போல, பந்தயத்தின் முதல்நாளன்று பெருமழை பெய்து மண்ணைக் குளிரச் செய்து, தன் பேரானந்தத்தைக் காட்டி,

கிரேக்க நாட்டு கீர்த்திமிகு, மன்னர் முதலாம் ஜார்ஜ். அரசியார் மற்றும் அரச பரம்பரையினர். அனைவரும் மூன்றூ மனு அளவிற்கு அரங்கத்திற்குத் தமக்கே உரிய