உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. ஒலிம்பிக் பந்தயத்தின் தொடக்கம்


அகில உலக ஒலிப் பிக் கழகத்தின் தலைவர் முதலில் எழுந்து, வந்திருக்கும் விழா நடக்கும் நாட்டின் தலைவரை வரவேற்று. பின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் தலைவர் களை அறிமுகப்படுத்தி வைப்பார். அவரை க் கெளரவிக்கும் வண்ணம், அவரது நாட்டுத் தேசிய கீதம் இசைக்கப்படும்.

இசை முழங்கும், வீரர்கள் வீராங்களைகளின் விமரிசை யான அணிவகுப்பு நடைபெறுகின்ற முறை மிகவும் சிறப்பாகவும், காணக் கண் கொள் ளாக் காட்சியாகவும் இருக்கும். ஒலிம்பிக் பந்தயத்தின் துவக்கத்திற்குக் காரணமான கிரேக்கர்கள் முதலாவதாகவும், ஒலிம்பிக் பந்தய விழாவினை நடத்துகின்ற நாட்டினர் இறுதியாகவும் இருக்க, மற்ற நாடுகள் ஏ. பி. சி. என்ற அகர வரிசையின் படி நிற்க, அணிவகுப்பு முறை அழகுடன் நடக்கும். அவர்கள் வந்து பந்தய அரங்கத்தின் முன்னே நிற்பார்கள்.

அமைதியின் சின்னமாக நூற்றுக்கணக்கான புருக்கள். பலூன்கள் விண்வெளியில் பறக்கவிடப்படும். விழா நடக்கும் நாட்டின் சிறந்த உடலாளர் (Athlete) ஒருவர். ஒலிப்பியாவிலிருந்து சூரிய ஒளியிலிருந்து நேரடியாகப் பெற்று, தீ ஏற்றப்பெற்ற தீபச் சுடரை ஏந்திக்கொண்டு. ஒடி வந்து, ஒலிம்பிக் சுடரை அதற்குரிய இடத்தில் ஏற்றி, வைப்பார்.