88
இருக்க வேண்டும். ஆகவே, வெற்றி வீரன் ஒருவனது, வரலாற்று நிகழ்ச்சியை எந்த ஆசிரியராவது எழுதமுனையும் பொழுது, அவன் எத்தனை முறை வெற்றி பெற்றன். எத்தனை முறை தோல்வியுற்ருன் என்று எழுதமாட்டார். அவன் எவ்வாறு சிறப்பாக, திறன் நுணுக்கங்களுடன் விளையாடினான் என்றுதான் அதியற்புதமாக எழுது வார் என்பதை மட்டும் நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
பழைய ஒலிம்பிக் பந்தயத்தில் முதல் வெற்றி விரளும் வந்தவன் 'கரோபஸ்' என்பவன். அவன் ஓடிய நேரத்தின் வெற்றிச் சாதனையை' (Record) 1200 ஆண்டுகள் வரை யாரும் மீற இயலவில்லை. அதேபோல் புதிய ஒலிம்பிக் பந்தயத்தின் முதல் வெற்றி வீர கைத்திகழ்ந்தவர் ஜேம்ஸ் கனேலி என்ற அமெரிக்க வீரர். அவர் மும்முறைத் 'தாண்டும்' போட்டியில் முதன் முதலாக வெற்றி பெற்ருர்
பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் ஐந்தே நாட்கள்தான் நடைபெற்றன. புதிய ஒலிம்பிக் பந்தயத் துவக்கமே பத்து நாட்கள் நடந்தன. அதாவது ஏதென் சில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்கள் 1896ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 15-ந் தேதியன்று இனிதே நிறைவுற்றன. இப்பொழுது 16 நாட்கள் பந்தயங்கள் நடைபெறுகின்றன.