பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:Rh92


இத்தனே சக்தியையும் இயக்குகின்ற இன்ப உலகம் ஒன்று, தங்களுக்கு மேலே வானில் இருக்கிறது என்று நம்பினர். பிறரையும் நம்பச் செய்தனர். நம்பியதோடல்லாமல், நடைமுறையிலே செயல்படவும் தொடங்கினர். "வலிமை யுடையவர்கள் , வளமாக வாழ்கின்றவர்கள், நல்லவர்கள் வல்லவர்கள் என்று வாழ்வதால்தான், நமக்கும் அவர்கள் உதவுகின் ருர்கள்' என்று, மேலுலகத்தாரை நம்பினர். அவர்களே ஆத்மசுத்தியோடு வணங்கில்ை, அன்புடன் தம்மையும் தம் குடும்பத்தாரையும் காப்பார்கள்’ என்று உறுதியுடன் முடிவு செய்தனர். முடிவின் வழி தொடர்ந்தது. அந்த அற்புத சக்திகளே எல்லாம் ஆண்டவனுக்கிப் பாடினர்-பரவினர்-வழிபட்டனர்

இத்தனைக்கும் மேலாக, கிரேக்க நாட்டின் வடக்குப் பகுதியில் இருககின்ற ஒலிம்பஸ் மலையில்தான் அத்தகன தெய்வங்களும் வாழ்கின்றன என்று அதைப் புனிதமான மலைப் பகுதி என்று போற்றினர். அதன்மேல் ஏறுவது பாவம், பழி நிறைந்த செயல் என்றும் ஒதுக்கினர். இந்த மலைப் பகுதியில் தான், புனிதமான ஒலிம்பியா பகுதியில் தான் விகளயாட்டுப் பந்தயங்களைத் தோற்றுவித்துப் பெருமையோடும் திறமையோடும் விளையாடி மகிழ்ந்தனர்.

அவர்கள் தொடங்கி வைத்த பெருமைமிகு விகள் யாட்டுக்கள் இன்று பீடுநடை போடுகின்றன. ஈடிலா இன்பத்தை, இனிய சுகத்தை எல்லா நாட்டினருக்கும் தங்குதடை யில்லாமல் வாரி வழங்குகின்றன. நடமாடும் தெய்வங்களான நாட்டு மக்கள், நலம் நாடும் தெய்வங், களாக நாட்டிலே ந ட ம | ட க் கண்டு, உவகையோடும் உளமாரப் போற்றி வளர்த்த பந்தயங்கள். இன்று. ஒய்யாரமாய் உலகிலே பவனி வருகின்றன. நான்காண்டு, களுக்கு ஒர் முறை வரும் பந்தயங்களை நம் குலம் வாழ, நாடு, வாழ வாழ்த்தி நாமும் வரவேற்போம்.