பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பூவை எஸ். ஆறுமுகம்

“இந்தாப்பா பணம், வழியிலே நாயர் சாயாக் கடையிலே இட்டிலி சாப்பிட்டிட்டு வா,” என்றார்.

”ஐயா, ஏழையாய்ப் பிறந்த இந்தப் பிள்ளைக்குக் காசு பணம் வேண்டாமுங்க; உங்க அன்பு தாங்க வேணும்!” என்று தயங்கினான் தேரு. பிறகு, தன் கிழிசல் சட்டைப் பையிலிருந்து காகிதம் ஒன்றை எடுத்து மரியாதையாக அதைத் தலைமை ஆசிரியரிடம் கை நடுங்க நீட்டினான்.

“நொடியிலே போய், நொடியிலே திரும்பிடு வேனுங்க, ஐயா!” என்று நேர்மைத் திறம் குலுங்கச் சொல்லிக்கொண்டே பிறகு, குடிசையை நோக்கிச் சோற்றுத் தட்டோடு விரைந்தான். நேரு!

பிற்பகல்—

பள்ளி மீண்டும் செயற்படுவதற்கான அறிவிப்பு ஒலிக்கிறது.

ஐந்தாம் வகுப்பில் தமிழாசிரியர் நுழைவதற்கும், அங்கே நேரு வந்து சேருவதற்கும் சரியாகவே இருந்தது.

அப்போது அங்கே வந்தார் தலைமை ஆசிரியர் “அருணகிரி! நம்ப நேருவை உடனே என் அறைக்கு வரச் சொல்லுங்கள்!” என்று கேட்டுக் கொண்ட பின் திரும்பி விட்டார்.

பையன்கள் திடுக்கிட்டனர். ஆனால், நேரு மாத்திரம் திடுக்கிடவில்லையே!—உடனே தலைமை ஆசிரியரின் அறைக்குப் புறப்பட்டான்.