பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

19

அதிசயம் நீட்டிய பாக்கிப் பணத்தை வாங்கி அதை அப்படியே அதிசயத்தின் அன்னையிடம் ஒப்படைத்தார்!—"அம்மா! உங்க அருமை மகன் அதிசயம் செஞ்ச குற்றத்துக்கு நான் தண்டனை கொடுத்திட்டேன்!—நீதி பிழைச்சது; அந்த நீதி உங்களோட அன்பான, பாசமான தருமத்தைக் காத்திடுச்சுங்க, அம்மா! ஏசுபிரான் தானே வழியாகவும் சத்தியமாகவும் ஜீவனாகவும் இருப்பதாகச் சொன்ன வேதவாக்கு எவ்வளவு உண்மை ஆகிடுச்சுங்க, பார்த்தீங்களா அம்மா?” என்று கூறி விம்மினார் கம்பெனி நிர்வாகி ராமையா!

தெய்வங்கள் சிரித்திருக்காதா? அப்போது, அங்கே பொன் விடியலாக, நாணயமான அமைதி நாகரிகமான அன்போடு தவழத் தொடங்கியது!