பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

21

இல்லை. கூர்க்காவுக்குப் பதிலாக, யாரோ கிழவர் ஒருவர் காலை வெயிலில் நின்றார். கதவுகள் திறந்தே கிடந்தன.

தயக்கம் தெளிந்து, “முதலாளியைப் பார்க்க வேணுமுங்க, பெரியவரே!” என்றான் பாலமுருகன்

காவற்காரர் சிரித்தார் “எங்க முதலாளியையா?” என்று கேட்டார்.

“ஆமாங்க. உங்க முதலாளியைத்தான்” என்ற புன்னகையுடன் பதில் சொன்னான் அச்சிறுவன்.

“தம்பி முதலாளியை இப்போது நீ பார்க்க முடியாது. சின்ன முதலாளிக்கு உடம்பு சரியில்லை, அதனாலே கவலையோடு இருக்காங்க” என்று தெரிவித்தார் பெரியவர்.

“ஆ” என்று அதிர்ச்சி அடைந்தான் பால முருகன். அவனது இளம் மனம் துடித்தது. உடனே அவன் விடுவிடென்று உள்ளே பாய்ந்தோடத் தலைப்பட்டான்.

கூடத்திலே நின்று கொண்டிருந்த முதலாளி பெரியசாமி திரும்பிப் பார்த்தார். “ஏய் நில்லு,யார் நீ? உள்ளே ஏன் ஒடுறே?’ என்று ஆத்திரத்துடன் வினவினார்.

பாலமுருகன் அக்கேள்விகளை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லையே!

ஒ-2