பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வ!

23


நீயும் உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். நாம் ரெண்டுபேரும் மறுபடியும் கோலி விளையாட பகவான் கட்டாயம் அருள்புரிவான்” என்று சொல்லி கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட எத்தனம் செய்தான் பாலமுருகன்.

அச்சமயம்--

“தம்பி! நீதான் பாலமுருகனா? உனக்குவேலை போட்டுக் கொடுக்கவேணும்னு எங்க குமார் ராத்திரியே முடிவு சொல்லிவிட்டானே, இனி என் முடிவு எதற்கு?

மேலும் என் செல்வ மகன் குமார் பேரிலே நீ வச்சிருக்கிற அந்த அன்பும் பாசமும்தான் உனக்குரிய வேலையை எடுத்துக் கொண்டு விட்டதே? நீ இப்போதிருந்தே எடுபிடியாக இருப்பா” என்றார் பெரிய முதலாளி பெரியசாமி.

“ஐயா”! என்று உணர்ச்சிப் பெருக்கோடு அழைத்தான் பாலமுருகன். “இங்கே நடந்து வந்துகிட்டிருக்கையிலே காந்தி மகாத்மாவோட நூற்றாண்டு விழாக்கூட்டம் ஒன்று நடந்திச்சுங்க.

அப்போ “அன்பு எதையும் கேட்காது, கொடுக்கவே செய்யும்” அப்படின்னு காந்தி மகாத்மா சொன்ன பொன்மொழியை விளக்கிக்கிட்டிருந்தார் ஒருவர்.