பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பூவை எஸ். ஆறுமுகம்


அப்பொழுது ஆற்றின் நடுவிலிருந்து ஒரு குரல் எதிரொலித்து வந்தது. யாரோ ஒரு கிழவன் வண்டியில் நடு ஆற்றில் அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருத்தபடி, “ஐயாமார்களே, என்னைக் காப்பாற்றுங்கள்... அண்ணன்மார்களே, என் உயிரைக் காப்பாற்ற மாட்டீர்களா?...ஐயோ தண்ணீரில் மூழ்கப் போகிறேனே...!” என்று கூப்பாடு போட்டான்.

மூன்று பீமன்களும் திரும்பிப் பார்த்தார்கள்; ‘பூ’ என்று கூறிவிட்டு நடந்தார்கள்; மெய்க் காப்பாளன் பதவி அவர்களை வா, வா!’ என்று அழைத்தது.

இளைஞன் மாணிக்கம் திரும்பினான். நட்டாற்றில் உயிருடன் ஊசலாடிக் கொண்டிருந்த கிழவனின் அபய ஒலம் அவனுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. முண்டாசை வரிந்து கட்டிக்கொண்டு ஆற்றின் குறுக்கே நீந்தினான். வண்டியுடன் கிழவனை உயிருடன் காப்பாற்றி விட்டான் மாணிக்கம்!

கிழவன் நன்றி சொல்லி, அந்த மாணிக்கத்தைத் தோளுடன் அணைத்துக் கொண்டான்.

“தாத்தா! மனிதர்களாகப் பிறந்ததற்கு இம் மாதிரி ஆபத்துக் காலங்களில் உதவி, ஒத்தாசை செய்யாவிட்டால், அப்புறம் மனிதப் பிறவிக்கு அர்த்தமே கிடையாது. என் பெற்றோர் விட்டுச்