பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

35

“ராஜேந்திர பாலா...”

“தந்தையே...”

தந்தையும் தனயனும் ஆரத் தழுவிக்கொண்டார்கள்; ஆனந்தக் கண்ணிர் வடித்துக் கொண்டார்கள்.

விருந்து தொடங்கியது. மந்திரி பிரதானிகள், ராஜப் பிரமுகர்கள். அயல்தேசத் தூதர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

மன்னர்பிரானும் இளவரசரும் இனிப்புப் பதார்த்தத்தைச் சுவைத்தார்கள்; சிரித்துக் கொண்டார்கள்.

அப்போது---

“மன்னர் மன்னரே! ஈழத்திலிருந்து ராஜ தூதன் ஒருவன் வந்திருக்கிறான், ஒர் இளைஞனையும் அழைத்துக்கொண்டு. உங்கள் தரிசனம் வேண்டுகிறான்.”

“வரச்சொல்! ஒடு!”

தூதன் வந்தான்; கூட இளைஞனும் வந்தான்!

“வேந்தே! ஈழத்து மன்னன் பராக்கிரமசீலன் இவ்விளைஞனைத் தங்களிடம் சேர்ப்பிக்கச் சொல்லியுள்ளார்கள். இவர் தங்கள் திருக்குமாரர் என்பதை நேற்றுத்தான் அரசர் அறிய முடிந்தது. பல ஆண்டுகளுக்குமுன் தங்கள் நாட்டில் கடந்த