பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!

41


வேண்டுமென்றும் கருதியிருந்தார். ஆனால் தாய் நாட்டுப்பணியில் அல்லும்பகலும் உழைத்துவரும் பெருந்தலைவரை இம்மாதிரியான சொந்தக்காரியங்களுக்குப் பயன்படுத்துவது சரியல்ல என்றும் கருதி, தம்முடைய மேற்கண்ட ஆசையை அடக்கிக் கொண்டார். இந்தத் தேர்தல் முடிந்ததும்: தலைவரை அவ்வூருக்கு வரவழைக்க வேண்டும் எனவும் தீர்மானம் செய்து கொண்டார்.

தேர்தல் என்றால் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டார் சிவசிதம்பரம். தேர்தலில் குதிக்கவேண்டுமென்று அவரைப் பலர் பல தருணங்களில் தூண்டுவார்கள்.

அப்போதெல்லாம் தேர்தல்தான் இந்த ஜன. நாயகயுகத்தில் சுயநலத்தைத் தூண்டும் மோகினி!” என்று துணிகரமான உண்மையைச் சொல்லிவிடத் தயங்காதவர் அவர்.

முன் ஒருதினம்; அப்பகுதியில் வினோபாஜி பாதயாத்திரை செய்தார். அவரிடம் தமது அன் வளிப்பாக ஓர் ஏக்கர் நஞ்சைநிலத்தை அர்ப்பணம் செய்தார் சிவசிதம்பரம்.

அவரது ஈகையின் உதவியால் படித்து முன் னேறிய ஏழைப்பிள்ளைகள் அநேகர்.

அன்னாரது தர்மங்களால் தழைத்த நிறுவனங்களும் பலவுண்டு.