பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பூவை எஸ். ஆறுமுகம்


அவரவர்களுக்கு உரிய பருவம் வரும் வரை, அரசியல் பற்றி அக்கறை காட்டக்கூடாது என்றே ஆணை பிறப்பித்திருந்தார் அவர். இல்லையென்றால் பிள்ளைகளின் படிப்பு கெட்டு விடாதா, என்ன?

தன்னைப்பெற்று வளர்த்த தாய் தந்தையரின் நினைவைப் போற்றும் வகையில் தமது புது மனைக்கு மங்களம் குமரன் வீடு” என்று பெயர் சூட்ட வேண்டுமென்று முடிவிட்டவண்ணம் இராப் பொழுதைக் கழித்தார், சிவசிதம்பரம்,

ஆனால், விடிந்த பொழுது லால்பகதூரின் உயிரையன்றோ கொள்ளை கொண்டது! தாய்த் திருநாட்டின் சீலம் பேண, தாஷ்கண்ட் பயணப் பட்ட மாமேதை, தாயகம் திரும்பாமலே தன் பணிக்கு ஒரு முத்திரை பதித்துக் கொண்ட இடம் தாஷ்கண்ட் அல்லவா?. சாஸ்திரியின் அமர நினைவுக்கு ஒரு சின்னமென அமைந்து விட்டதே தாஷ்கண்ட்!

உடலும் உள்ளமும் சோர்ந்து விழ, சாஸ்திரியின் அமர நினைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, புதுப்பொலிவுடன் திகழ்ந்த தமது பங்காளவை நோட்டமிட்டார் சிவசிதம்பரம்.

“ஆம்; இம்மனை அமரர் சாஸ்திரியின் நினைவுக்கு-அவரது தாஷ்கண்ட் சமாதான யாத்