பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

45


திரைக்கு ஒரு நினைவுச் சின்னம். ஆகவே, இம் மனைக்கு 'தாஷ்கண்ட் வீடு’ என்றே பெயர் சூட்ட வேண்டும்!’ என்று தீர்மானித்தார்.

பெண்டு பிள்ளைகள் ஏக மனதாகவும், ஒருமைப்பட்ட ஐக்கியத்துடனும் தந்தையின் முடிவை ஆமோதித்தனர்.

மழை விடாமல் பெய்தது!

புதுமனை புகுவிழா ஆரம்பமானது.

“தாஷ்கண்ட் வீடு” என்னும் எழுத்துகள் துலாம்பரமாகப் பளிச்சிட்டு மின்னிக் கொண் டிருந்தன.

ஏழை எளியவர்களுக்கு அளித்த அன்னதான நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது; புனிதச் சடங்குடன் தொடர்ந்தது; விருந்தும் முடிந்தது.

சிவசிதம்பரம் தம்பதியும் பிள்ளைகளும் பால் காய்ச்சிக் குடித்து, விருந்து உண்டு மகிழ்ந்தார்கள்.

விழா முடிந்து சிறுபொழுதாகியிருக்கும். பள்ளி சென்ற கடைக்குட்டிப் பையன் ஓடோடி வந்தான். அப்பா, அப்பா! எங்க ஸ்கூல் திடுதிப்பென்று இடிந்து விழுந்து விட்டது. நல்லவேளை, யாருக்கும் சேதமில்லை, ஆனால், நாளைக்கு ஸ்கூல் நடத்துவதற்குத்தான் இடமில்லை!” என்று வருத்தத்துடன் தெரிவித்தான்,