பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

சொல்லப்போனால், சின்னச் சின்னக் கதைகள் தாம் சின்னச் சின்ன உலகமாக அன்றும் விளங்கியது; இன்றும் விளங்குகிறது!

கதைகள் உலகம் மாத்திரமன்று; அந்தக் கதைகளே உலகியல் வாழ்க்கையாகவும் அன்றும் அமைந்தன; இன்றும் அமைந்திருக்கின்றன,

“இளைய பாரதத்தினாய்! வா! வா! வா! என்று முத்தாய்ப்பிடும் தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! என்று வரவேற்புரை வழங்குகிறார் அல்லவா?......

அப்படிப்பட்ட அன்புத் தம்பி, தங்கைகள் பயன் பெறும் வகையில் சத்தியமானதும் தருமமானதும் உண்மையானதுமாள உலக வாழ்க்கை மேம்பாட்டுத் தத்துவங்களை இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் உங்களுக்குப் பாடம் சொல்லும்! இவையெல்லாம், அந்நாளில் நான் பணிபுரிந்த ‘உமா’ ‘மனிதன்’ மற்றும் ‘பொன்னி’ இதழ்களிலும் சென்னை வானொலிநிலையத்தின் கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சியிலும் இடம் பெற்றவை.

உங்களுக்கெல்லாம் என் நல்வாழ்த்துகளும் என்றுமே உண்டு.

பதிப்பகத்தினருக்கு நன்றி.

பூவைமா நகர்
9-5-1990
அன்புடன்,
பூவை. எஸ். ஆறுமுகம்